Published:Updated:

``கூட்டுறவுச் சங்கங்களில் ரூ.15 கோடி மோசடி; நடவடிக்கை நிச்சயம்!" - அமைச்சர் ஐ.பெரியசாமி

நகை மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில் கர்ப்பிணிகளுக்குச் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கர்ப்பிணிகளுக்குச் சீமந்தப் பொருள்களை வழங்கினார்.

அதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``தமிழகத்திலுள்ள கூட்டுறவுக் கடன் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில், பல்வேறு இடங்களில் போலி நகைகளை வைத்தும், நகைகளை வைக்காமலும் இதுவரை சுமார் ரூ.15 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றிருக்கிறது.

வளைகாப்பு
வளைகாப்பு

அதை முறையாகக் கண்டறிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதுவரை 30 சதவிகிதம் அளவுக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகளிலுள்ள கணினிகளை ஒன்றாக இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

இந்தப் பணிகள் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும். நகை மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. கூட்டுறவுத்துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு தீபாவளிப் பண்டிகை முடிந்ததும் வெளியிடப்படும். இந்தத் தேர்வில் எந்தத் தவறும் நடைபெறாமல் வெளிப்படைத்தன்மையுடன் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு