Published:Updated:

`பொய் வழக்கு போட்டு போலீஸ் மிரட்டினாங்க!' - அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்; 3 போலீஸார் பணியிடமாற்றம்

காவல் நிலையம்

``திறனற்ற தி.மு.க அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக் காரணமான அனைவரின் மீதும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." - அண்ணாமலை

`பொய் வழக்கு போட்டு போலீஸ் மிரட்டினாங்க!' - அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்; 3 போலீஸார் பணியிடமாற்றம்

``திறனற்ற தி.மு.க அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக் காரணமான அனைவரின் மீதும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்." - அண்ணாமலை

Published:Updated:
காவல் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர் மனைவி கோகிலா. கடந்த 1-ம் தேதி தனது வீட்டில் சேலையில் தூக்கிட்டு சடலமாக தொங்கினார். தற்கொலை செய்து கொண்ட அறையிலிருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. தற்கொலை செய்வதற்கு முன்பு கோகிலா கைப்பட எழுதிய கடிதம் என்று கூறப்படுகிறது. அதில், ``என் இறப்பிற்கு தி.மு.க நிர்வாகி எம்.எம்.குமார் அவர் மனைவி புவனேஸ்வரி, எஸ்.எஸ்.ஐ ஜெயக்குமார், கிரேசி ஆகியோர்தான் காரணம். செய்யாத குற்றத்திற்கு பொய் வழக்கு பதிவுசெய்து போலீஸார் எங்களை மிரட்டினார்கள். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக் கொள்கிறேன்" என்று எழுதி வைத்துவிட்டு உயிரிழந்தார்.

`பொய் வழக்கு போட்டு போலீஸ் மிரட்டினாங்க!' - அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்; 3 போலீஸார் பணியிடமாற்றம்

இந்தச் சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சுமத்தப்பட்ட புவனேஸ்வரியும் காவலராக கீரமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கோகிலா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீரமங்கலம் காவல் நிலையத்தில் நீலகண்டன் புகார் கொடுத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோகிலாவின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை போராட்டம், சாலை மறியல் போரட்டத்திலும் ஈடுபட்டனர். அறந்தாங்கி கோட்டாட்சியர் விசாரனை நடத்தினார். பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட கோகிலாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்கொலைக்குக் காரணமான அனைவரின்மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, உறவினர்கள் கோகிலாவின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.

இதற்கிடையே பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சகோதரி கோகிலா தி.மு.க நிர்வாகியின் தூண்டுதலின் பெயரால், பதியப்பட்ட பொய் வழக்கினால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக உயிரைத் துறந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திறனற்ற தி.மு.க அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் அமைந்துள்ளது.

`பொய் வழக்கு போட்டு போலீஸ் மிரட்டினாங்க!' - அண்ணாமலை வெளியிட்ட ட்வீட்; 3 போலீஸார் பணியிடமாற்றம்

இந்த உயிரிழப்புக் காரணமான அனைவரின்மீதும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், கீரமங்கலம் எஸ்.ஐ ஜெயக்குமார் மீமிசலுக்கும், கிரேசி மணமேல்குடிக்கும், புவனேஸ்வரி நமணசமுத்திரம் காவல் நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே உத்தரவிட்டிருக்கிறார்.

காவல்துறையினரிடம் கேட்டபோது, ``இது தொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.