Published:Updated:

`நாட்டு மாடு குறித்த விழிப்புணர்வு!' - பாலமேடு ஜல்லிக்கட்டில் வித்தியாச பரிசு வழங்கும் ஆர்வலர்

நேரடியாக இதை நான் பிரசாரம் செய்தால், யாரும் இதை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். விழிப்புணர்வு செயல்பாடுகள் என்னில் இருந்து தொடங்கட்டும் என்று நினைத்தேன்.

பரிசு வழங்கப்பட உள்ள நாட்டு மாடு, பசு
பரிசு வழங்கப்பட உள்ள நாட்டு மாடு, பசு

பாலமேடு ஜல்லிக்கட்டில் நாட்டுப் பசுவும், கன்றும் பரிசுபெறும் சிறந்த காளைக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் அடங்கிய குழுவினரால் நடத்தப்பட்டது.

அவனியாபுரம்
அவனியாபுரம்

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடக்கிவைத்தார். இன்று, (தை 2-ம் நாள்) பாலமேட்டிலும், நாளை அலங்காநல்லூரிலும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக, வெளிநாட்டுப் பயணிகள் உட்பட உள்ளூர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெறும் காளையின் உரிமையாளருக்கு, நாட்டுப் பசுவுடன் கன்றையும் பரிசாக வழங்குவதாக அறிவித்திருக்கிறார், அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன்.குமார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். ''கடந்த 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. நான் அலங்காநல்லூர் போராட்டத்தில் முழுமையாகக் கலந்துகொண்டதால், எனக்குள் ஜல்லிக்கட்டு உணர்வு முழுமையாக விதைக்கப்பட்டது. அந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும் அல்ல. நாட்டு இன மாடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதும்தான். இந்த விழிப்புணர்வை வெளியே கொண்டுபோக வேண்டும் என நினைத்தேன்.

பொன்.குமார்
பொன்.குமார்

நேரடியாக இதை நான் பிரசாரம் செய்தால், யாரும் இதை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். விழிப்புணர்வு செயல்பாடுகள் என்னிலிருந்து தொடங்கட்டும் என்று நினைத்தேன். அதன்படி 2017 போராட்டத்திற்குப் பின், அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த மாட்டுக்கு நாட்டு மாடுகளைப் பரிசாக வழங்கினேன். அந்த மாடுகள், மலையில் மேயும் நாட்டு வகை வெள்ளையும், செவலையும் ஆகும். அவற்றைப் பரிசாகக் கொடுத்தேன்.

அப்போது இலங்கை எம்.பி செந்தில் தொண்டைமான், அவருடை மாடும் பண்ணைக்குடி விஜய் என்ற மாடுபிடி வீரரும் பரிசை வாங்கிச் சென்றனர். கார், பைக் பரிசு வழங்கியிருந்தால் அவர்களுக்கு செலவைத்தான் கொடுத்திருக்கும். ஆனால், நான் வழங்கிய நாட்டு மாடுகள் நல்ல வருமானத்தைத் தந்திருக்கும். தற்போது பாலமேட்டுல் கன்றுடன் இணைந்த பசுவைப் பரிசாக வழங்க உள்ளேன்.

போஸ்டர்
போஸ்டர்

இந்த மாடு, சேலம் மாவட்டம் தாராமங்கலத்தில் உள்ள காங்கேயம் மாடுகள் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் நபரிடமி ருந்து வாங்கியது. இது, 100% தூய்மையான நாட்டு மாடாகும். இதற்கு 4 பற்கள் மட்டுமே வந்துள்ளது. இதன் வாழ்நாளில் 15 கன்றுகள் வரை வழங்கும்.

தற்போது, தினமும் 3 லிட்டர் வரை பால் கொடுத்துவரக்கூடிய மாடாகும். எனவே, இந்தக் கன்றையும் மாட்டையும் சிறந்த காளைக்குப் பரிசாக பாலமேடு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி வழங்கும். தொடர்ந்து நாட்டு மாடு வழங்க வேண்டும் என்பது எண்ணம் இல்லை. இதை விழிப்புணர்வுக்காக வழங்குகிறேன்.

நாட்டு மாடு
நாட்டு மாடு

அனைவரும் நாட்டு மாட்டை வளர்க்க முன் வரவேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். 2019ல் இனப்பெருக்க தடைச் சட்டம் பற்றி அனைவருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. இது, நாட்டு மாடுகளை அழிக்கும் நோக்கம் என்றால், கண்டிப்பாக அரசு அதை நீக்க வேண்டும்'' என்றார்.