Published:Updated:

மூவர் நுழையும் குகை; ராணுவ நடையில் அதிசயப் பாறைகள்! -அறியப்படாத சிவகங்கை

பாறை
பாறை

ஒக்கூரை அடுத்த திருமண்பட்டி என்ற இடத்தில் அழகிய பாறைகளைப் பார்க்க முடிந்தது. திருமண்பட்டி - மலம்பட்டி இடையே இந்தப் பாறைகள் ராணுவ நடைபோல கம்பீரமாக அமைந்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவுதான் என்ற சலிப்பு பலருக்கும் உண்டு. ராமேஸ்வரம், மீனாட்சி அம்மன் கோயில் என்று தென்மாவட்டத்துக்கு வரும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் சிவகங்கை பிள்ளையார்பட்டிக்கும் வருவதுண்டு.

பாறைகள்
பாறைகள்

இப்படி தெப்பத்துக்கும் கோயிலுக்கும் பஞ்சமில்லாத சிவகங்கையில் சுற்றுலா செல்ல பெரிய அளவுக்கு இடங்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், கட்டடக் கலை, தொல்லியல் சான்றுகள், வேட்டங்குடி சரணாலயம், மானாமதுரை மண்பாண்டம், குன்றக்குடி, இடைக்காட்டூர், பிரான்மலை என்று பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் பல்வேறு அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் ஆங்காங்கே மறைந்து கிடப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் நம்மிடம், ``சிவகங்கையில் கீழடி போல பல்வேறு அதிசயங்கள் உள்ளன. ஆனால் இவை பலருக்கும் தெரியாத ஒன்றாகவே உள்ளது. சமீபத்தில் என்னுடைய பயணத்தில் ரம்யமான இடம் ஒன்றைப் பார்க்க முடிந்தது.

பாறை
பாறை

சிவகங்கை ஒக்கூரை அடுத்த திருமண்பட்டி என்ற இடத்தில் அழகிய பாறைகளைப் பார்க்க முடிந்தது. திருமண்பட்டி - மலம்பட்டி இடையே இந்தப் பாறைகள் ராணுவ நடைபோல கம்பீரமாக அமைந்திருக்கின்றன. மலை போல அமைந்துள்ள இந்தப் பாறைகள் சிவகங்கை மாவட்டம் மதுரை மாவட்டத்தை இணைக்கும் இடமாக உள்ளன. மதுரை மேலூர் வழியாகவும் இந்தப் பாறை பகுதிக்கு வரலாம். ஏரியூர் ஆகாசப் பாறை போல இருக்கும் இந்தப் பாறை அதன் தொடர்ச்சிதான் என்று கூறப்படுகிறது. பெரும் பாறைகள் ஆற்றில் அடித்துச் சென்றது போல் வடிவத்திலும் காற்றின் திசையில் வழிந்தது போலவும் காட்சியளிக்கின்றன.

`6-ம் நூற்றாண்டு சிரியா நாணயம்; 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம்!' - கீழடி ஆச்சர்யம்

ஒவ்வொரு பெரும் பாறையும் சிறுவர்கள் கூழாங்கற்களில் அடுக்கியது போல் அழகுறக் காட்சியளிக்கும். குழந்தைகளின் கற்பனையில் பாறை விலங்காகவும் பேயாகவும் பூச்சியாகவும் மேகமாகவும் ஓவியமாகவும் காட்சியளிக்கிறது. வனத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பாறைகள் கொண்ட மலை ஆழ்ந்த அமைதியைத் தருகிறது. பல்லுயிர்ப் பெருக்கத்திற்கான இந்த இடம் வர்ணிக்கமுடியாத வரமாகும். இங்கு 3 நபர்கள் நுழையும் அளவுக்கு ஒரு பாறையால் ஆன குகையும் உள்ளது.

பாறை
பாறை

மேலும் பல்வேறு சுனைகளையும் கொண்டுள்ளது. இந்த மலையைச் சுற்றியுள்ள திருமலை, ஏரியூர் மருந்தீஸ்வரர், ஆகாசப்பாறை, ஏரியூர் செட்டிநாடு வீடுகள் எனப் பலவற்றையும் இணைத்து ஒரு சுற்றுலாத்தலமாக மாற்றலாம். அறியப்படாத சுற்றுலாவாக இருக்கும் இந்த இடங்களை அதிகாரபூர்வ சுற்றுலாவாக மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் சிவகங்கையில் சுற்றுலாத் தலங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு