Published:Updated:

கல்லூரிகளில் கொத்துக்கொத்தாகப் பரவும் கொரோனா; மோடிக்கு பயந்து, மூடிமறைக்கும் தமிழக அரசு!

 ஸ்டாலின்
News
ஸ்டாலின்

``மருத்துவக்கல்லூரிகளைத் திறக்கவும், தன்னுடைய கட்சி நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்கவும் பிரதமர் மோடி வருகிறார். ஆட்சியைப் பிடித்த பிறகு முதன் முதலில் வரும் பொங்கல் என்பதால், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்று சென்டிமென்ட் பார்க்கிறது தி.மு.க அரசு."

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாள்களாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் பல கல்லூரிகளிலும் மாணவர்கள் கொத்துக்கொத்தாக கொரோனாத் தொற்றுக்கு ஆளாகிவருவது தெரிந்தும், இந்த விஷயத்தை அதிகாரிகள் மறைப்பதாகவும் பொருமுகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.

வரும் 12 -ம் தேதி தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளைத் திறந்தவைப்பதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு வைத்திருந்தது தமிழக அரசு. அதையேற்று தமிழகம் வரும் மோடி, கூடவே, பி.ஜே.பி சார்பில் மதுரையில் நடத்தப்பட உள்ள மாபெரும் பொங்கல் விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். சுமார் 10,000 பேர்வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, தமிழகம் முழுக்க பொங்கல் விழாவுக்குத் தமிழக அரசாங்கத்தின் சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கலாசார விழா என்கிற பெயரில் பல நிகழ்ச்சிகள் அரசாங்கத்தின் சார்பிலேயே திட்டமிடப்பட்டு, அதற்கான விரிவான ஏற்பாடுகளும் நடக்கின்றன. ஆளுங்கட்சியினர் இதற்காக ஜரூராக வேலைகள் பார்த்து வருகின்றனர்.

அடுத்து, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டுக்கும் ஆங்காங்கே விரிவான ஏற்பாடுகள் நடக்கின்றன. இவை எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மேன்மேலும் தன் ஆதிக்கத்தை வேகமாக பரப்பி வருகிறது, கொரோனா. டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை இரண்டுமே பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார், பாரதிதாசன் என்று கிட்டத்தட்ட அனைத்துப் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிலையங்களிலும் பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, விடுதி மாணவர்களிடையே இந்தத் தொற்று அதிகரித்துள்ளது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த விவரங்கள் குறித்து நம்மிடம் பேசிய தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ``கோவையிலிருக்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கிளைகளாக தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே கொரோனா பரவல் கூடுதலாக இருக்கிறது. பலருக்கும் பாஸிட்டிவ் என்று வந்திருக்கும் நிலையில், இதுகுறித்த தகவல்களை வெளியில் சொல்லாமல் இருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் பெரும்பாலான கல்லூரிகளில் ஒமிக்ரான் வகையும் கூடுதலாக பரவி வருகிறது. கொத்துக்கொத்தாக பாஸிட்டிவ் என்று தகவல் வருகிறது. ஒருவார காலமாக இங்கே இப்படி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இப்போதுதான் 46 பேருக்கு பாஸிட்டிவ் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். உண்மையில், இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களில் மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாஸிட்டிவ் ஆகியுள்ளனர். நான்காமாண்டு மற்றும் முதலாமாண்டு மாணவர்கள் பற்றி தெரியவில்லை. ஆனால், கணக்கைக் குறைத்துக் காண்பித்துள்ளனர்.

 Covid
Covid
AP Photo / Channi Anand

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கிவரும் கலைக்கல்லூரிகள் பலவற்றிலும் விடுதி மாணவர்கள் மற்றும் வீட்டிலிருந்து வந்து செல்லும் மாணவர்கள் என்று பலருக்கும் கொரோனா பரவியுள்ளது.

அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ளுக்குள் வைத்தே பரிசோதனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. ஆனாலும், தகவல்கள் வெளியிடப்படவில்லை. மாநில அரசு, மத்திய அரசு மற்றும் தனியார் என கிட்டத்தட்ட அனைத்துக் கல்வி நிலையங்களிலுமே பரவல் அதிகரித்துள்ளது. கடந்தவாரம் மேல்மருவத்தூர் கோயிலுக்கு வந்து சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பெங்களூரு சென்ற பிறகு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சுமார் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் என்பதால் அங்கிருந்து தகவல்கள் வெளியிடப்பட்டுவிட்டன. இதையடுத்து, கோயில் ஊழியர்கள் அக்கம்பக்கத்தினர் என்று அனைவரையும் பரிசோதிக்கப் போவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், இவர்களாகவே பரிசோதிக்கும் கல்லூரிகள் குறித்து எந்தவித தகவல்களும் வெளியில் வராமல் மிகமிக ரகசியமாக பார்த்துக் கொள்கிறார்கள்'' என்று குறிப்பிட்ட அவர், இதற்குக் காரணமே தமிழக அரசுதான் என்று குற்றம்சாட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மருத்துவக்கல்லூரிகளைத் திறக்கவும், தன்னுடைய கட்சி நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்கவும் பிரதமர் மோடி வருகிறார். அதேபோல, ஆட்சியைப் பிடித்த பிறகு முதன் முதலில் வரும் பொங்கல் என்பதால், தமிழர்களின் பாரம்பர்யமான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தியாகவேண்டும் என்று சென்டிமென்ட் பார்க்கிறது தி.மு.க அரசு.

இதுபோன்ற காரணங்களுக்காக மக்களின் உயிரோடு விளையாடிப் பார்ப்பதுதான் ஆபத்தானது. குறிப்பாக, மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பதை மறைத்து, அவர்களையெல்லாம் விடுதிகளிலேயே தங்கவைத்து மருத்துவம் பார்த்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி தனிமைப்படுத்திக் கொள்ள வைக்கவேண்டும். தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக மருத்துவமனை மூலமாகச் சிகிச்சை தரப்படவேண்டும். ஆனால், எதையுமே செய்யாமல் உயிரோடு விளையாடுகிறார்கள்.

MK Stalin
MK Stalin

ஒவ்வொரு கல்லூரிக்கும் மாவட்ட அதிகாரிகள் சென்று பார்வையிடுகிறார்கள். எந்த அளவுக்கு விஷயத்தை மூடிமறைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மூடி மறைக்கிறார்கள். அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக டெல்டா மற்றும் ஒமிக்ரான் பரவல் இன்னும் அதிகரிக்கவே செய்யும். இது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி வைத்த கதையாகத்தான் இருக்கிறது.
உடனடியாக கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் தொற்று பாதித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதையும் உறுதிப்படுத்தவேண்டும். மற்ற மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்'' என்றும் சொன்னார்.

ஒருவேளை, மோடியின் விசிட், பொங்கல் கொண்டாட்டம் எல்லாவற்றையும் நடத்தி, ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுக்க கொரோனாவைப் பொங்க வைத்த பிறகு, வழக்கம்போல தகர ஷீட்டைத் தூக்கிக் கொண்டு வருவார்களோ என்னவோ?!

- பூநி