Published:Updated:

``மது அருந்துவோர் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகத்திற்கு 4-வது இடம்!" - மது ஒழிப்பு கூட்டமைப்பு வேதனை

மது விற்பனை வேண்டாம் - அரசுக்கு அறிக்கை
மது விற்பனை வேண்டாம் - அரசுக்கு அறிக்கை

மதுவால் கணவனை இழந்த இளம்பெண்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். இதற்கெல்லாம் மது முக்கியக் காரணமாக இருக்கிறது. மதுவால் ஏற்படும் வியாதிகள் கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``மது விற்பனை தொடர்பாக மக்கள் கருத்து கேட்க தமிழக அரசு குழு அமைக்க வேண்டும். தமிழகத்தில் முழுமையாக மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்" எனத் தமிழ்நாடு மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

மது ஒழிப்புப் போராளி சசிப்பெருமாள் நினைவு நாளன்று `மதுவில்லாத தமிழகமே மகிழ்ச்சியான தமிழகம்' என்ற அறிக்கையைத் தமிழ்நாடு மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது‌.

மது விற்பனை
மது விற்பனை
`உங்கள் மூளையே உங்களுக்கு வில்லன்!' - போதைக்கு நாம் அடிமையாவது எப்படி? - நான் அடிமை இல்லை - 2

மதுவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்காக அறிக்கை வெளியிட்ட இந்நிகழ்வில், தமிழ்நாடு மதுஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசகர் கிறிஸ்டினாசாமி, தமிழகப் பெண்கள் கூட்டமைப்பு, தேன் சுடர் பெண்கள் இயக்கம், தமிழ் மாநில பெண்கள் இயக்கம், சுவாதி பெண்கள் இயக்கம், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் இயக்கம், சமூக நீதிக்கான சட்ட மாணவர் அமைப்பு, நாட்டைக் காப்போம் அமைப்பு, சுய ஆட்சி இந்தியா எனப் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த அறிக்கை குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மது ஒழிப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.ராஜன், ``பெண்கள் மீதான வன்முறை, குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான வன்முறை என அனைத்து வன்முறைகளுக்கும் விபத்துகளுக்கும் பல்வேறு தீமைகளுக்கும் பல நேரங்களில் மதுவே அடிப்படைக் காரணமாக உள்ளது. தனிநபர் மற்றும் குடும்பத்தின் சமூக பொருளாதார நிலையைக்கூட இது வீழ்த்துகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட முடிவதில்லை. ஆனால், மூலை முடுக்கெல்லாம் மதுபானம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சி.ஜே.ராஜன்
சி.ஜே.ராஜன்
ஈ.ஜெ.நந்தகுமார்

குடிகாரர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. முதல் மூன்று இடங்களை திரிபுரா, அந்தமான், சிக்கிம் பிடித்திருந்தாலும் அவை மிகச்சிறிய மாநிலங்கள். தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாலை விபத்துகளில் தொடர்ந்து தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

2019-ம் ஆண்டில் தமிழகத்தில் 57,228 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் இன்னொரு அதிர்ச்சித் தகவல், இந்தியாவிலுள்ள 53 நகரங்களில் சென்னையில்தான் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளன.

மதுவால் கணவனை இழந்த இளம்பெண்கள் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். இதற்கெல்லாம் மது முக்கியக் காரணமாக இருக்கிறது. மதுவால் ஏற்படும் வியாதிகள் கடந்த 10 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்லீரல் நோய் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேலே உள்ளவர்களுக்கு மதுவே நோய் வரக் காரணமாக உள்ளது. சாலை விபத்துகளில் காயமடைந்து அனுமதிக்கப்பட்டோரில் 80 சதவிகிதத்துக்கு மேலானோர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள்தான்.

குடிகாரர்கள், குடிநோயாளிகள் உள்ள குடும்பத்தில் அமைதி தொலைகிறது. பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. வீட்டிலுள்ள குழந்தைகளின் வளர்ச்சியும் எதிர்காலமும் பாதிக்கப்படுகின்றன. இந்தச் சீர்கேடுகளில் இருந்தெல்லாம் தமிழக மக்கள் வெளிவர, முழுமையான மதுவிலக்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மது விற்பனை வேண்டாம் - அரசுக்கு அறிக்கை
மது விற்பனை வேண்டாம் - அரசுக்கு அறிக்கை
நெல்லை: குடிபோதை; கிணற்றுக்குள் தள்ளி கொலை! - மதுவால் நண்பனுக்கு ஏற்பட்ட சோகம்!

மதுவால் வரும் வருமானத்தை விட்டுவிட்டு மாற்றுவழியில் வருமானத்தை அரசு உருவாக்க வேண்டும். குடியால் எதிர்கால சந்ததியினரின் பண்பாடு, வாழ்வியல் சீரழிகிறது. அனைத்து வகுப்புப் பாடப்புத்தகங்களிலும் மதுவின் தீமைகள் குறித்து விளக்குவது அவசியமாகிறது. மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்களை வானொலி, தொலைக்காட்சியில் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும். தமிழகத்தில் இயங்கும் மது ஆலைகள் மூடப்பட வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மது போதையிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைத்தல் வேண்டும். இம்மையங்களில், மதுப்பழக்கத்துக்கு உள்ளான குடும்பங்களை ஆற்றுப்படுத்தும் ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்‌.

மது விற்பனை தொடர வேண்டுமா என்பது பற்றி மக்கள் கருத்தறிய ஓய்வு பெற்ற நீதிபதி, மருத்துவக்கல்லூரி முதல்வர் தலைமையிலான குழு அமைத்தல் வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு