Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆஜரான வழக்கறிஞர்... காணொலியில் விசாரணை நடத்திட ரஜினிகாந்த் மனு!

ரஜினிகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையை, தன்னிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடத்திட நடிகர் ரஜினிகாந்த், தன் வழக்கறிஞர் மூலம் கோரிக்கை மனுவை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆஜரான வழக்கறிஞர்... காணொலியில் விசாரணை நடத்திட ரஜினிகாந்த் மனு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணையை, தன்னிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடத்திட நடிகர் ரஜினிகாந்த், தன் வழக்கறிஞர் மூலம் கோரிக்கை மனுவை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

Published:Updated:
ரஜினிகாந்த்

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டு மக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது, திடீரென ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்வம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் கலவரம் ஏற்பட சமூக விரோதிகளின் ஊடுறுவல்தான் காரணம்” எனக் கூறியிருந்தார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினியின் இந்த சர்ச்சைப்பேச்சு பல தரப்பினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, “ரஜினியை விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த வேண்டும்” எனப் பல தரப்பினரும் ஆணையத்தில் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஜராகிட சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், தனக்கு படிப்பிடிப்பு பணிகள் இருப்பதாலும், தான் தூத்துக்குடிக்கு வந்தால் தன்னைக் காண அதிகப்படியான ரசிகர்கள் திரள்வதால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதாலும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும் படியும், ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தரப்பில் கோரிக்கை மனுவை ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டு காரணங்களில் முதல் காரணத்தை மட்டும் ஆணையம் ஏற்றுக் கொண்டது. கொரோனா ஊரடங்கினால் கடந்த 8 மாதமாக விசாரணை தடைபட்டது. இதுவரை 23 கட்ட விசாரணைகள் நடந்துள்ள நிலையில் மொத்தம் 865 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 586 பேர் விசாரிக்கபட்டுள்ளனர். 775 ஆவணங்கள் சேகரிக்கபட்டுள்ளது. 24வது கட்ட விசாரணை நேற்று துவங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. முந்தைய 23வது கட்ட விசாரணையின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேலிடம், “விசாரணை ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது விசாரணைக்கு அழைக்கப்படுவார்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இளம்பாரதி - வழக்கறிஞர்
இளம்பாரதி - வழக்கறிஞர்

அதற்கு, “ அடுத்தமாதம் நடைபெறவுள்ள 24வது கட்ட விசாரணையின்போது ரஜினிகாந்த் விசாரணைக்கு அழைக்கப்படுவார்” என்றார். இந்நிலையில், இன்று (19-ம் தேதி) நேரில் ஆஜராகிட ரஜினிகாந்திற்கு கடந்த மாதமே சம்மன் அனுப்பபட்டது. இந்நிலையில், ரஜினிகாந்த் விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி நேரில் விளக்கம் அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நடிகர் ரஜினிகாந்த் ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை. அவருக்குப் பதிலாக ஆணையத்தின் முன்பு அவரது வழக்கறிஞரான நான் ஆஜராகினேன். தற்போது நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்து வருகிறது. ரஜினியிடமும் அந்த முறையைப் பின்பற்றி விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

ஒருநபர் விசாரணை ஆணையம்
ஒருநபர் விசாரணை ஆணையம்

‘தூத்துக்குடியிலுள்ள ஆணையத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லை. தேவைப்பட்டால் சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் நேரடியாக விசாரணை நடத்தப்படும்’ எனவும், எங்களது மனுவை பரிசீலனை செய்து பதில் அனுப்புவதாக நீதியரசர் கூறியுள்ளார். ஏற்கெனவே கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்கள் அடங்கிய மனுவை தாக்கல் செய்துள்ளோம். மேலும், ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் தயாராக உள்ளோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism