Published:Updated:

`வழக்கமான மருத்துவ பரிசோதனை’ - நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளும் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காகத் தான் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக லதா ரஜினிகாந்த் தனியார் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், இன்று மாலை வழக்கமான பரிசோதனைக்காகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தனியார் ஊடகத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளும் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனை சென்றிருப்பதாகவும், லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். மருத்துவ பரிசோதனை முடிந்து ஒருநாள் அப்சர்வேஷனில் இருப்பார் எனவும் ரஜினி தரப்பில் கூறப்படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு