கோவை மாவட்டம், சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “காலங்கள் கூடக் கூட பெரியார்மீது மக்களுக்கு மரியாதையும் கூடுகிறது. விமர்சனமும் கூடவே வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தந்தை பெரியார் கடவுள் மறுப்பைப் பேசினாரே தவிர, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்ததில்லை. குன்றக்குடி அடிகளார் இருக்கையில், அமர்ந்திருந்தபோது அவருக்கு இணையாக அமர மறுத்தவர் பெரியார்.
காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, தி.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதைக் கேள்விப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி காஞ்சி பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுத்தவர் பெரியார். பிறர் உணர்வுகளை மதிப்பவர். இப்போது, அந்த உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

சிறுவர்கள் பெரியார் படம் மீது சிறுநீர் கழிக்கின்றனர். செருப்பால் அடிக்கின்றனர். அவர் என்ன பாவம் பண்ணினார்... இதில் அவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைத்து விடப்போகிறது?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
யார் சொல்லி அவர்கள் இப்பச்டி செய்கின்றனர் என்று தெரியவில்லை. ஆனால், இதையெல்லாம் பார்த்தால் பெரியார் சந்தோஷப்பட்டிருப்பார். ஆதிக்க சக்திகளைத்தான் அவர் வெறுத்தார். அவர் பிராமணீயத்தைத்தான் வெறுத்தார். பிராமணர்களை வெறுக்கவில்லை.

தற்போது, ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஆசிரியர்கள், மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர் என்று அனைத்துத் துறைகளிலும் புற்றீசல்போல பணியில் இருப்பதற்கு பெரியார் போட்ட விதை ஒன்றேதான் காரணம்” என்றார்.