Published:Updated:

`பிகில்' படம் காட்டி சிறுவனுக்கு தையல் போட்ட மருத்துவர்; சிறுவனைத் தேடும் விஜய்!

பிகில்
பிகில்

``சிறுவன் குறித்த விஷயத்தை நடிகர் விஜய் கேள்விப்பட்டிருக்கிறார். அதனையடுத்து சிறுவனைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவனுடைய விவரங்களைச் சேரிக்க ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது".

இருசக்கர வாகனத்தில் பின்னிருக்கையில் அமர்ந்திருந்து இரவு நேரத்தில் பயணித்தபோது தூக்கக் கலக்கத்தில் சாலையில் விழுந்த 10 வயது சிறுவனுக்கு விஜய் நடித்த `பிகில்' படத்தில் காட்சிகளைக் காட்டி சிகிச்சையளித்துள்ளனர், அரசு மருத்துவர்கள். சென்னை அண்ணாசாலை அருகே பட்டுலாஸ் சாலையில் 10 வயது சிறுவன் தன் மாமாவுடன் பயணித்தபோது கீழே விழுந்ததில் நெற்றியிலும் கண்ணுக்குக் கீழும் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.

Hospital (Representational Image)
Hospital (Representational Image)
Image by Parentingupstream from Pixabay

இதனையடுத்து, சிறுவனின் மாமா அருகிலிருந்த அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்துள்ளார். இரவு நேரத்தில் பணியிலிருந்த மருத்துவர் சிறுவனின் காயத்தைப் பார்த்துவிட்டு தையல் போட வேண்டும் என்று கூறியிருக்கிறார். தையல் போடுவதற்கு முன்பு அந்தப் பகுதியை மரத்துப் போகச் செய்வதற்காக ஊசி போட வேண்டும். அதைச் செலுத்தச் சென்றபோது சிறுவன் கத்தி, ஆரவாரம் செய்து ஊசி போடவிடாமல் தடுத்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனுக்கு எப்படிச் சிகிச்சையளிப்பது எனத் தெரியாமல் மருத்துவர்கள் திகைத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் இரவுப் பணியிலிருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர், சிறுவனிடம் மெதுவாகப் பேச்சுகொடுத்து, சிறுவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று கேட்டுள்ளார்.

நடிகர் விஜய்யை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று அந்த வலியிலும் தெரிவித்துள்ளான் சிறுவன். மேலும் விஜய் நடித்த படங்கள், பாடல்கள், வசனங்கள்கூட தனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தனது மொபைல்போனில் யூடியூபில் விஜயின் `பிகில்' படக்காட்சிளைப் போட்டு சிறுவனிடம் அதைக் கொடுத்துள்ளார்.

அரசு ராயப்பேட்டை மருத்துவமனை
அரசு ராயப்பேட்டை மருத்துவமனை

அதை உற்சாகத்துடன் வாங்கிய சிறுவன் அந்தக் காட்சிகளிலேயே லயிக்க, மருத்துவர்கள் ஊசியைச் செலுத்தி, இரண்டு காயங்களிலும் 8 தையலும் போட்டுவிட்டனர். வலியிலும் விஜயின் படக்காட்சிகளைப் பார்த்து உற்சாகமடைந்த சிறுவன் குறித்த செய்தி விஜயின் காதுகளையும் எட்டியுள்ளது.

இது தொடர்பாக ராயப்ப்பேட்டை அரசு மருத்துமனையில் பணியாற்றும் சில ஊழியர்களிடம் பேசினோம்.
``சிறுவன் குறித்த விஷயத்தை நடிகர் விஜய் கேள்விப்பட்டிருக்கிறார். அதனையடுத்து சிறுவனைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக அவனுடைய விவரங்களைச் சேரிக்க ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகி மருத்துவமனைக்கு வந்து சிறுவன் குறித்த விவரங்களைக் கேட்டார்.

விஜய்
விஜய்
`Beast' அப்டேட்ஸ்: `புட்டபொம்மா' மாஸ்டருடன் விஜய் - பூஜா ஹெக்டே டான்ஸ்... அடுத்து எங்கே ஷூட்?

ஆனால், சிறுவனின் உடன் வந்தவர் பெயர், விலாசம் என அனைத்தையும் மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. மேலும் தொடர்பு எண்ணையும் கொடுக்காமல் சென்றிருக்கிறார். ஊடக நண்பர்கள் உதவியுடன் சிறுவனைத் தேடினார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள். இந்நிலையில் சிறுவனின் உறவினரின் விவரங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளன. அந்தச் சிறுவனைச் சந்திக்கும்போது அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவரையும் விஜய் சந்திக்க விரும்புவதாக ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்" என்று ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு