Published:Updated:

`நடிகர் விஜய், தமிழகத்தின் ஜெகன் மோகன்!' -கும்பகோணம் ரசிகர்களின் பிறந்தநாள் போஸ்டர்

விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்
விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

பிறந்தநாளுக்காக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு, போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய்-யின் பிறந்தநாளையொட்டி கும்பகோணத்தில் அவரது ரசிகர்கள், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் விஜய் இருப்பது போன்ற போட்டோவைப் பயன்படுத்தி, போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

விஜய்
விஜய்

நடிகர் விஜய்க்கு, வரும் 22-ம் தேதி 46-வது பிறந்தநாள். கொரோனா பரவிவரும் நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம், எந்த ஆடம்பரச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார், விஜய். ஆனாலும் அவரது ரசிகர்கள் விஜய்யை வாழ்த்தி சுவர் விளம்பரம் எழுதுதல், போஸ்டர் ஒட்டுதல் போன்ற பணிகளை ஆர்வமுடன் செய்து வருகின்றனர். மேலும், தனிமனித விலகலுடன்கூடிய நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துவருகின்றனர்.

முதல்வரே.. தலைவனே.. அழகனே..  இதயமே.. சிகரமே.. நடிகர் விஜய் பிறந்தநாளுக்கு மதுரை ரசிகர்களின் போஸ்டர் வாழ்த்து

இந்நிலையில், அவரின் பிறந்தநாளுக்காக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் விஜய்யை ஒப்பிட்டு, `வருங்கால தமிழகத்தின் ஜெகன் மோகனாரே' என போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் கும்பகோணம் பெருநகர பொருளாளர் பெலிக்ஸிடம் பேசினோம். ``தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் நிலவிவருகிறது. அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளை மக்கள் கவனித்துவருகின்றர்.

விஜய் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்
விஜய் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்

ஒரு அரசியல் கட்சிக்கான அனைத்து அமைப்புகளும் விஜய் மக்கள் இயக்கத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரு வலுவான பில்லரை தளபதி விஜய் அமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களிலேயே இளம் முதல்வராக இருப்பவர், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன், அவர் விஜய் வயதை ஒட்டியவர் என்பதால், அவரைப் போலவே விஜய்யும் எதிர்காலத்தில் தமிழகத்தை ஆள்வார். அதற்காகவே இருவரையும் இணைத்து போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறோம். இதனைப் பரபரப்புக்காகச் செய்யவில்லை. தமிழகத்தின் ஜெகன் மோகன் ரெட்டியாக தளபதி விஜய் வர வேண்டும் என எங்கள் மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு