Published:Updated:

நடிகை தற்கொலை; உதவி இயக்குநரிடம் விசாரணை! - ஐபோனைத் தேடும் போலீஸ்

தற்கொலை செய்த நடிகை தீபா என்கிற பவுலின்ஜெசிகா

துணை நடிகை தற்கொலை வழக்கில் உதவி இயக்குநர், அவரின் நண்பர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நடிகை தற்கொலை; உதவி இயக்குநரிடம் விசாரணை! - ஐபோனைத் தேடும் போலீஸ்

துணை நடிகை தற்கொலை வழக்கில் உதவி இயக்குநர், அவரின் நண்பர் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Published:Updated:
தற்கொலை செய்த நடிகை தீபா என்கிற பவுலின்ஜெசிகா

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபா (என்ற) பவுலின்ஜெசிகா (29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக வசித்துவந்தார். இவர் `வாய்தா’ படத்தில் கதாநாயகியாகவும், இன்னும் சில படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். டிக் டாக்கிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்துவந்தது. இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி திடீரென பவுலின் ஜெசிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன்னுடைய நண்பரான உதவி இயக்குநர் ஒருவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்தே நடிகை தற்கொலை செய்துகொண்ட தகவல் கோயம்பேடு காவல் நிலையத்துக்குத் தெரியவந்தது.

நடிகை  தீபா என்கிற பவுலின்ஜெசிகா
நடிகை தீபா என்கிற பவுலின்ஜெசிகா

இதையடுத்து கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நடிகையின் சடலத்தை மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நடிகை தற்கொலைச் சம்பவம் தொடர்பாக அவரின் சகோதரர் ராஜேஷ் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். நடிகை ஜெகசிகா தற்கொலை செய்துகொண்ட அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் காதல் குறித்தும், ``இந்த உலகில் வாழ விரும்பவில்லை!" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நடிகை ஜெசிகாவின் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ஜெசிகாவின் சகோதரர் ராஜேஷ், ``என்னுடைய தங்கை தைரியமானவர். அவர் தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கு கோழை இல்லை. அவரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். ஜெகசிகா பயன்படுத்திவந்த ஐபோன் மாயமாகிவிட்டது. ஜெகசிகாவின் இன்னொரு செல்போன் மட்டும் போலீஸாரிடம் இருக்கிறது. எனவே, தங்கையின் மரணத்துக்கான காரணத்தை போலீஸார் கண்டறிய வேண்டும். என்னுடைய தங்கையின் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகம் உள்ளது" என்று கூறினார்.

நடிகை  தீபா என்கிற பவுலின்ஜெசிகா
நடிகை தீபா என்கிற பவுலின்ஜெசிகா

இது குறித்து கோயம்பேடு போலீஸாரிடம் பேசினோம். ``தற்கொலை செய்துகொண்ட நடிகை தீபா என்கிற பவுலின்ஜெசிகா, ப்ளஸ் டூ வரை படித்திருக்கிறார். சென்னையில் தனியாகத் தங்கியிருந்து சினிமாவில் நடித்துவந்திருக்கிறார். அப்போது வடசென்னையைச் சேர்ந்த உதவி இயக்குநர் ஒருவருடன் நடிகை ஜெசிகாவுக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ஜெசிகா, உதவி இயக்குநருக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். உடனடியாக அந்த உதவி இயக்குநர், கட்டுமானப் பணி செய்துவரும் தன்னுடைய நண்பருக்குத் தகவல் தெரிவித்து ஜெசிகாவின் வீட்டுக்குச் செல்லும்படி கூறியிருக்கிறார். ஆனால், அதற்குள் ஜெசிகா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் ஜெசிகா ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டுக்குச் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருக்கின்றன. மேலும், ஜெசிகா எழுதிவைத்திருந்த தற்கொலைக் கடிதத்தையும் கைப்பற்றியிருக்கிறோம். ஜெசிகா பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்திருக்கிறோம். ஜெசிகாவின் இன்னொரு செல்போனான ஐபோனைக் காணவில்லை என்று அவரின் சகோதரர் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். அதனால் ஐபோனையும் தேடிவருகிறோம். நடிகை ஜெசிகா, கதாநாயகியாக நடித்த பிறகு துணை நடிகையாக நடிக்க விரும்பாததால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்திருக்கும் தகவலும் கிடைத்திருக்கிறது. ஜெசிகாவின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்திவருகிறோம். அதேநேரத்தில் ஜெசிகா, யாருக்கெல்லாம் போன் செய்தார் என்ற விவரங்கள் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.