Published:Updated:

உக்ரைனில் தவிக்கும் திருவாரூர் மாணவர்கள்; வாட்ஸ் அப் வீடியோ காலில் நம்பிக்கை தெரிவித்த காமராஜ்!

மாணவர்களிடம் பேசும் ஆர்.காமராஜ்

உக்ரைனில் தவிக்கும் மாணவி பத்மபிரியாவிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் அவருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

உக்ரைனில் தவிக்கும் திருவாரூர் மாணவர்கள்; வாட்ஸ் அப் வீடியோ காலில் நம்பிக்கை தெரிவித்த காமராஜ்!

உக்ரைனில் தவிக்கும் மாணவி பத்மபிரியாவிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் அவருக்கு நம்பிக்கை தெரிவித்தார்.

Published:Updated:
மாணவர்களிடம் பேசும் ஆர்.காமராஜ்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அங்கு படித்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் பெரும் தவிப்பில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான், திருவாருரிலிருந்து உக்ரைனுக்கு படிக்கச் சென்று, அங்கு சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர், அவர்களை விரைவாக மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆறுதல் கூறினார்.

பத்மபிரியா
பத்மபிரியா

திருவாரூர் காரைக்காட்டு தெருவில் வசித்து வருபவர், நைனார் முகமது. இவர் மனைவி ஷபானா திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவர்களின் மகன் ஜெயினுல் ஆரிஃப் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நேஷனல் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதிதான் உக்ரைன் நாட்டிற்கு மருத்துவப் படிப்பிற்காக சென்றுள்ளார். இதேபோல், திருவாரூர் மாவட்டம் குடவாசல் விஷ்ணுபுரம் கிராமத்தில் வசித்து வரும் வைத்தியநாதன் என்பவரின் மகள் அபிராமியும் உக்ரைனில் உள்ள அதே மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். உக்ரைனில் தற்போது போர் நடைபெற்று வருவதால் பாதாள அறைகளில் அவர்கள் தஞ்சமடைந்து இருப்பதாகவும், அவர்களை உடனடியாக மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காய்த்ரி கிருஷ்ணனிடம், இந்த மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஆறுதல் கூறும் காமராஜ்
ஆறுதல் கூறும் காமராஜ்

இதற்கிடையே உக்ரைனில் போர் சூழலில் ஆபத்தான நிலையில் இருந்து வரும் குடவாசல் விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த மாணவி அபிராமி, தங்களை பத்திரமாக மீட்டு தமிழகத்திற்கு கொண்டு செல்லுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் ஆகியோருக்கு வாட்ஸ் அப் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ், குடவாசல் விஷ்ணுபுரம் கிராமத்தில் உள்ள பத்மபிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உக்ரைனில் தவிக்கும் மாணவி பத்மபிரியாவிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது அவரிடம் பேசிய மாணவி பத்மபிரியா, ``ஒரு சிறிய அறையில் 40 மாணவர்கள் தங்கியுள்ளோம். உணவும் குடிநீரும் தீரப்போகிறது. எங்களைப் போலவே 500-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பாதுகாப்பாக மீட்டு தமிழகம் அழைத்துச் செல்லுங்கள்" என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

உக்ரைன் - ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணைய அதிகாரிகளை தொடர்புக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், திருவாரூர் மாணவர்களின் நிலை குறித்து பேசியுள்ளார்.

திருவாரூர் காரைக்காட்டு தெருவைச் சேர்ந்த ஜெயினுள் ஆரிஃப் வீட்டுக்குச் சென்று ஆர்.காமராஜ் ஆறுதலும், நம்பிக்கையும் தெரிவித்தார்.

இந்த மாணவர்களின் பெற்றோர்கள் மிகுந்த கண்ணீரோடு, தாங்கள் கடந்த மூன்று நாள்களாக நிம்மதி இன்றி தவிப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் விரைவாகச் செயல்பட்டு தங்கள் பிள்ளைகளை தமிழகம் மீட்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism