Published:Updated:

`முதல்வர் அறிவிப்பால் தொழிலாளர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்!'- ஊழியர்களுக்காக குரல் கொடுத்த வழக்கறிஞர்

சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின்
சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின்

``நின்றுகொண்டே வேலை செய்வதால் 'வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose veins) எனும் ரத்த நாள அடைப்புப் பிரச்னைக்கு அவர்களில் பலர் ஆளாகிறார்கள்." - வழக்கறிஞர் செல்வகோமதி.

நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் உட்பட பல்வேறு வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்களில் நின்றுகொண்டே பணி செய்யும் ஊழியர்களுக்கு இனி நிறுவனத்தினர் இருக்கை வழங்க வேண்டும் என்ற மசோதாவை, மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதை கால் கடுக்க நிற்கும் தொழிலாளர்களும், பல்வேறு அமைப்புகளும் வாழ்த்தி வரவேற்றுள்ளன.

ஜவுளிக்கடை தொழிலாளர்கள்
ஜவுளிக்கடை தொழிலாளர்கள்
'புகைப்பட' விளம்பரங்களைத் தவிர்க்கும் ஸ்டாலின்! பல தரப்பின் வரவேற்பு 'சொல்வது' என்ன?

நீண்டகாலமாக வைக்கப்பட்டு வந்த இக்கோரிக்கையை இதுவரை ஆட்சியிலிருந்தவர்கள் யாருமே கண்டுகொள்ளாத நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தக் கோரிக்கை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்த மதுரை `நீதிபதி சிவராஜ் வி பாட்டீல் பவுண்டேஷன்' நிர்வாகி, வழக்கறிஞர் செல்வகோமதியிடம் பேசினோம். ``தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள், பஞ்சாலைகள் எனப் பல இடங்களிலும் நின்றுகொண்டே வேலை செய்கிறார்கள்.

செல்வகோமதி
செல்வகோமதி

அவர்கள் அனைவரும் தினமும் கிட்டத்தட்ட 12 மணி நேரம் நின்றுகொண்டே வேலை செய்யும் அவலம் நீடிக்கிறது. இப்படி நின்றுகொண்டே வேலை செய்வதால் `வெரிகோஸ் வெயின்ஸ்' (Varicose veins) எனும் ரத்த நாள அடைப்புப் பிரச்னைக்கு அவர்களில் பலர் ஆளாகிறார்கள். சிறு வயதிலேயே உடல் ரீதியான பிரச்னைகளும், மன ரீதியான பிரச்னைகளும் ஏற்படுகின்றன. பெண்களோ மாதவிடாய் காலத்தில் சிறு ஓய்வெடுக்கக் கூட இயலாத பரிதாப நிலை ஏற்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், கடைகளில் ஊழியர்கள் அமர்ந்து வேலை செய்வதை உறுதி செய்யும் அரசாணையை, அம்மாநிலத்தில் எழுந்த பல போராட்டங்களுக்குப் பின்னர் பிறப்பித்தார். இதை போன்று தமிழகத்திலும் ஜவுளிக்கடை, நகைக்கடை, மருந்தகங்களில் வாடிக்கையாளர் வராத சமயத்தில் அமர்ந்து பணி செய்யவும், பெண்களின் மாண்பை காத்து கவுரவமான பணிச்சூழலை உருவாக்கவும் உத்தரவிடக் கோரி எங்கள் ஃபவுண்டேஷன் சார்பிலும், ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள் சார்பிலும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். அதிலும் குறிப்பாக மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற நாள் முதல், ஆயத்த ஆடை தயாரிப்பு பெண் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான அஞ்சலட்டைகளை அவருக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவரும் இப்போது தமிழக அரசுக்கு நன்றிகளும் பாராட்டுகளுமாக நெகிழ்ச்சியில் உள்ளனர்.

சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஸ்டாலின்: மணிமண்டப அறிவிப்புகளுக்கு உள்ளாட்சித் தேர்தல்தான் பின்னணியா?! - ஓர் அலசல்

தமிழக அரசு, கடைகளில் தொழிலாளர்கள் அமர்ந்து பணி செய்யும் வகையில் மசோதா கொண்டு வந்துள்ளது, மகிழ்ச்சியை ஏற்படுத்திய அறிவிப்பு. தொழிலாளர்களின், குறிப்பாக பெண்களின் வலியை உணர்ந்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சருக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.

இத்துடன், கேரளா அரசு அறிவித்தது போல அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 21,000 என்று அறிவிக்கவும், முதியோர், மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகையை மாதம் ரூ. 5000-ஆக உயர்த்தவும் வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

தமிழகத்தில் கடைகளில் நாள் முழுக்க நின்றுகொண்டே வேலை செய்யும் தொழிலாளர்கள், தங்களின் ஓய்வின்போது அமர்ந்துகொள்ளும் உரிமைக்கே இத்தனை ஆண்டுகள் கால்கடுக்க நின்ற காத்திருப்பு, இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு