Published:Updated:

`20 வருடங்களுக்குப் பிறகு மின் இணைப்பு' - மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்!

பழங்குடியின மக்கள்

இந்த மக்கள் 20 ஆண்டுகளாக இருளில் சிரமப்பட்டுவந்தனர்.

`20 வருடங்களுக்குப் பிறகு மின் இணைப்பு' - மகிழ்ச்சியில் பழங்குடியின மக்கள்!

இந்த மக்கள் 20 ஆண்டுகளாக இருளில் சிரமப்பட்டுவந்தனர்.

Published:Updated:
பழங்குடியின மக்கள்

மின்சார இணைப்பு வழங்காததால் 20 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்ட பழங்குடியினர் குடியிருப்புக்கு அமைச்சர் உத்தரவால் வெளிச்சம் கிடைத்த சம்பவம் அந்த மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மின் இணைப்பு வழங்கப்படுகிறது
மின் இணைப்பு வழங்கப்படுகிறது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நிலையூர் அருகே காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் 34 குடிசைகளில் வசித்துவருகிறார்கள். இங்கிருப்பவர்கள் மின்வாரியத்தில் விண்ணப்பித்தும் பல்வேறு காரணங்களைக் கூறி மின் இணைப்பு தரப்படாததால், இந்த மக்கள் 20 ஆண்டுகளாக இருளில் சிரமப்பட்டுவந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாதிக்கப்பட்ட மக்கள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை அலுவலகத்தில் முறையிட்டனர். சென்னையில் சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த அமைச்சர், அலுவலகப் பணியாளர்களைச் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

மின் இணைப்பு வழங்கும் மின்வாரியத்தினர்
மின் இணைப்பு வழங்கும் மின்வாரியத்தினர்

அதைத் தொடர்ந்து மதுரை கலெக்டர் அனீஷ் சேகரின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையை அமைச்சர் தெரிவித்தவுடன், விரைந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகம், மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காட்டு நாயக்கர் சமூக மக்கள், ``நீண்டகாலமா இங்கே குடியிருந்துக்கிட்டு வர்றோம். சில வீடுகளுக்கு வீட்டு வரி ரசீதும் பெற்றிருக்கிறோம். அப்படியிருந்தும், எங்களுக்கு கரன்ட்டு இணைப்பு தராம இழுத்தடிச்சாங்க. அதனால எங்க பிள்ளைங்க தெரு லைட்டு வெளிச்சத்துலதான் படிச்சுட்டு வர்றாங்க.

மின் இணைப்பு வழங்கும் பணி
மின் இணைப்பு வழங்கும் பணி

கரன்ட் இல்லாம அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்தாங்க. இப்போ கரன்ட் கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மற்ற அடிப்படை வசதிகளையும் செஞ்சு கொடுக்கறதா சொல்லியிருக்காங்க" என்றனர்.