Published:Updated:

25 ஆண்டுகளுக்குப் பிறகு, திவான்சாபுதூர் ஊராட்சியை திமுக கைப்பற்றியது!

கோவை ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சியை 25 ஆண்டுகளுக்குப் பிறகு கைப்பற்றியிருக்கிறது திமுக.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை, பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன், அதிமுக சார்பில் சரோஜினி ஆகியோர் போட்டியிட்டனர்.

அதிமுக பிரசாரம்
அதிமுக பிரசாரம்
உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’-கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரிப் பெண்

மொத்தம் 8,556 வாக்காளர்களைக்கொண்ட இந்த ஊராட்சியில் அதிமுக-வே இத்தனை ஆண்டுகள் வென்றிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் கோவையில் திமுக ஒரு தொகுதியைக்கூடக் கைப்பற்றவில்லை.

கடைசியாக 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற்றிருந்தது. இதனால் மீண்டும் இந்த ஊராட்சியைக் கைப்பற்ற அதிமுக முனைப்பு காட்டியது. முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான வேலுமணி, வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி என்று பெரிய டீம் வேலை பார்த்தது.

திமுக பிரசாரம்
திமுக பிரசாரம்

திமுக தரப்பில் மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜனுடன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளரான டாக்டர் மகேந்திரனுக்கும் இந்த ஊராட்சிக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமைச்சர் கயல்விழி உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து கலைவாணியே முன்னிலை வகித்துவந்தார். 6,552 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் கலைவாணி 4,372 வாக்குகளும், சரோஜினி 2,075 வாக்குகளும் பெற்றனர்.

தேர்தல் முடிவு அறிவிப்பு
தேர்தல் முடிவு அறிவிப்பு

இதன் மூலம் 2,287 வாக்குகள் வித்தியாசத்தில் கலைவாணி பெற்றிபெற்றார். இந்த வெற்றியைத் திமுக-வினர் கொண்டாடிவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு