Published:Updated:

`பெங்களூரு, திருப்பூரைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை!' -`திடீர்' சத்தத்தால் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

நேற்று மதியம் சரியாக 3 மணிக்கு வெடிகுண்டு வீசியதுபோல பெரும் சத்தம் கேட்டது. இந்தச் சத்தத்தை பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உணர முடிந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் நேற்று வெடிகுண்டு வெடித்தது போல் ஒரு பெரும் சத்தம் கேட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். `எதனால் இந்தச் சத்தம் கேட்டது என மாவட்ட நிர்வாகம் விளக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டுக்கோட்டை 
நகரம்
பட்டுக்கோட்டை நகரம்

பட்டுக்கோட்டையில் கேட்ட சத்தம் குறித்து நம்மிடம் பேசிய வீரசேனன் என்பவர், `` நேற்று மதியம் சரியாக 3 மணிக்கு வெடிகுண்டு வீசியதுபோல பெரும் சத்தம் கேட்டது. இந்தச் சத்தத்தை பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உணர முடிந்தது. இதனால் வீடுகளில் லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. ஜன்னலில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள், கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் ஆடின. ஓடு வீடுகளில் இருந்த மண் துகள்கள் வீட்டுக்குள் விழுந்துள்ளன.

இதனால் மக்கள் வீடுகளை விட்டும், கடைகளுக்குள் வேலை செய்துகொண்டிருந்தவர்களும் அச்சத்தால் வெளியே ஓடி வந்தனர். ஒரு சில செகண்ட் மட்டுமே இந்தச் சத்தம் கேட்டது. எதனால் இந்தச் சத்தம் ஏற்பட்டது என ஒருவருக்கொருவர் அச்சத்துடன் கேட்டுக் கொண்டனர்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

வளிமண்டலத்தில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகமாக பயணிக்கும் விமானமோ, ஏதோ ஒரு பொருள் காரணமாகவோ அலையைத் தூண்டி அதிக சத்தம் எழும். இதை சூப்பர் சோனிக் சத்தம் என்றும் இதனால் பூமியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என டெல்டா மாவட்ட வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் கேட்ட திடீர் சத்தம்! - ஆட்சியர் விளக்கம்

ஒலியின் வேகத்தைவிட 2,500 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியிலிருந்து 45,000 அடி உயரத்தில் விமானம் செல்லும்போது இதுபோன்ற சத்தம் வரும் என இதற்கு முன் இதுபோன்ற சத்தம் வந்த பகுதிகளில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் மக்கள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்" என்றார்.

வீரசேனன்
வீரசேனன்

இதுகுறித்து, பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் கிளஸ்டன் புஷ்பராஜிடம் கேட்டோம். `` சத்தம் கேட்டது எனப் பலரும் சொல்கிறார்கள். எதனால் இந்தச் சத்தம் ஏற்பட்டது என்பதை வானிலை மையம்தான் அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும். வானிலை மையத்திடம் இது குறித்து கேட்டிருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு