Published:Updated:

`குவியல் குவியலாக இவ்வளவு ஐஸ் கட்டியைப் பார்த்ததில்லை..!’ - ஊட்டியில் ஆலங்கட்டி மழை

ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை

நீலகிரியில் கோடையின் பரிசாக கோடைமழை மூன்றாவது நாளாக பெய்து வருகிறது. இரட்டிப்பு மகிழ்ச்சியாக சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.

வறட்சியாலும், வனத்தீயாலும் தவிக்கும் காடுகளுக்கு மருந்தாக நீலகிரியில் கடந்த மூன்று நாள்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்துவருகிறது. வறண்டு கிடக்கும் நீர் நிலைகள் இந்தக் கோடை மழையால் மெல்ல புத்துயிர் பெற்று வருகின்றன. காடுகளும், காட்டுயிர்களும் தாகம் தீர்த்து வருகின்றன.

ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை

இந்தத் திடீர் மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளது. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் மெல்ல நீங்கி வருகிறது. ஆனால், நேற்று கேத்தி பகுதிகளில் பெய்த பெருமழையால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக் காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த நிலையில், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான முக்கட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த ஆலங்கட்டி மழையால் வீட்டின் கூரைகள், புல்வெளிகள், தேயிலைத் தோட்டம் என எல்லா இடங்களும் பனிக்கட்டியால் நிரம்பி வெள்ளையாகக் காட்சியளித்தன.

ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை

ஆலங்கட்டி மழையைக் கண்டு அதிசயித்த முக்கட்டி பிரவீன் நம்மிடம் பேசுகையில், ``கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவியது. நேற்று காலைமுதல் சாரல் மழை பெய்தது, மாலை 4 மணியளவில் பயங்கர இடியுடன் வானில் இருந்து ஐஸ் கட்டியாகக் கொட்டியது.

இந்தக் கட்டியால் கெக்கட்டி, முக்கட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலையில் ஓட்டை ஏற்பட்டு பாதிப்படைந்தது. ஒரே இடத்தில் குவியல் குவியலாக இவ்வளவு ஐஸ் கட்டியைப் பார்த்ததில்லை" என்றார்.

ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் இதுபோன்று ஆலங்கட்டி மழை பொழிவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தாக்கம் அதிகமாக இருப்பதாக இந்தப் பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு