Published:Updated:

"பல தலைமுறைக்குப் பிறகு சாமியைப் பாத்துட்டோம்!” - கண்ணீருடன் கோயிலுக்குள் சென்ற பட்டியல் சமூக மக்கள்

கோயில் - பட்டியல் சமூக மக்கள்
News
கோயில் - பட்டியல் சமூக மக்கள்

மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் துணையோடு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள் பட்டியல் சமூக மக்கள்.

"பல தலைமுறைக்குப் பிறகு சாமியைப் பாத்துட்டோம்!” - கண்ணீருடன் கோயிலுக்குள் சென்ற பட்டியல் சமூக மக்கள்

மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் துணையோடு கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள் பட்டியல் சமூக மக்கள்.

Published:Updated:
கோயில் - பட்டியல் சமூக மக்கள்
News
கோயில் - பட்டியல் சமூக மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தில், மாற்றுச் சமூகத்தினர் சுமார் 1,500 குடும்பங்களாக வசித்துவருகின்றனர். அதே கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 600 பேர் வசித்துவருகின்றனர். ஆனால், அந்த கிராமத்தில் இருக்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்தினுள் அந்த மக்கள் சென்று சாமியை வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், அந்தக் கோயிலுக்குள் தாங்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பட்டியல் சமூக மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், வைகுண்ட ஏகாதசியான இன்று பட்டியல் சமூக மக்களை ஒன்றிணைத்து கோயிலுக்குள் அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் முடிவெடுத்தன. 

வழிபாடு சீர்வரிசையுடன் பட்டியல் சமூக மக்கள்
வழிபாடு சீர்வரிசையுடன் பட்டியல் சமூக மக்கள்

எனவே, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி பகலவன், விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா உள்ளிட்ட காவல்துறையினரின் தலைமையில் சுமார் 300 போலீஸார் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர், பட்டியல் சமூக மக்களை ஊரின் மையப்பகுதியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அழைத்துச் சென்று, சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அந்த மக்கள் வழிபாட்டுக்கான சீர்வரிசையுடன் சென்று சாமியை தரிசிக்கும்போது, ``பெருமாளே உன்னைப் பார்த்துவிட்டோம்” என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

பட்டியல் சமூக மக்கள் - எடுத்தவாய்நத்தம்
பட்டியல் சமூக மக்கள் - எடுத்தவாய்நத்தம்

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸாரிடம், “மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு முதன்முறையாக சாமியைப் பார்த்துட்டோம்” என்று பட்டியல் சமூக மக்கள் நன்றி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.