Published:Updated:

விகடன் செய்தி எதிரொலி: வெளிச்சம் பிறந்தது; சீரானது பாரிமுனை பேருந்து நிலையம்! - அமைச்சர் நடவடிக்கை

பாரிமுனை
News
பாரிமுனை

தற்போது நிறுத்தத்தின் நான்கு பக்கங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குப்பைக் கிடங்காகக் கிடந்த மூலைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சர் சேகர் பாபு அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள பாரிமுனை பேருந்து நிறுத்தம் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து அச்சுறுத்தும்விதமாகவே காட்சியளிக்கும். பேருந்துகள் நிற்பதால் மட்டுமே பேருந்து நிறுத்தம் என்று அறியப்படுகிறது. சரியான சாலையோ, நடைமேடையோ, மின்விளக்குகளோ எதுவுமின்றி அதைப் பேருந்து நிலையமாகவே கருத முடியாத நிலையே நீடித்து வந்தது.

அமைச்சர் ஆய்வு
அமைச்சர் ஆய்வு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், சீர்குலைந்து கிடந்தது அந்தப் பேருந்து நிலையம். பயணிகளின் சிரமங்களையும், அவர்களின் தேவைகளையும் குறித்து விகடன் இணையதளத்தில் விரிவாகப் பதிவிட்டிருந்தோம்.

இதைத் தொடர்ந்து, அந்தப் பேருந்து நிலையத்தை முற்றிலுமாக அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்திருக்கிறார். உடனடியாக அதைச் சீரமைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

சீரானது பாரிமுனை பேருந்து நிலையம்!
சீரானது பாரிமுனை பேருந்து நிலையம்!

தற்போது நிறுத்தத்தின் நான்கு பக்கங்களிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குப்பைக் கிடங்காகக் கிடந்த மூலைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு இன்று பயணித்த சிலரிடம் பேசியதில், பயமின்றி இனி நிறுத்தத்தின் எல்லை வரை செல்லலாம் என்றும், இந்த முயற்சி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இன்னும் பாதுகாப்பாக அமைந்திருக்கிறது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். விரைந்து செயல்பட்ட அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியும் பாராட்டுகளும்!