Published:Updated:

`உணவுத்தட்டுப்பாடு, உடல் பருமன்; இரண்டுமே இந்தியாவின் பிரச்னைகள்தான்!' - கருத்தரங்கில் பேச்சு

உலக உணவுதின கருத்தரங்கில் பேசும் பொன்னம்பலம்

``உணவை வீணாக்கும் நாடுகள் பட்டியலில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். உணவு வீணாக்குவது பற்றி நாம் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும்" என்றார் கிரியேட் அமைப்பின் மேலாண்மை அறங்காவலர் பொன்னம்பலம்.

`உணவுத்தட்டுப்பாடு, உடல் பருமன்; இரண்டுமே இந்தியாவின் பிரச்னைகள்தான்!' - கருத்தரங்கில் பேச்சு

``உணவை வீணாக்கும் நாடுகள் பட்டியலில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். உணவு வீணாக்குவது பற்றி நாம் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும்" என்றார் கிரியேட் அமைப்பின் மேலாண்மை அறங்காவலர் பொன்னம்பலம்.

Published:Updated:
உலக உணவுதின கருத்தரங்கில் பேசும் பொன்னம்பலம்

உலக உணவு தினத்தையொட்டி பசுமை விகடன், விவசாய விளைபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் (அப்டா), நாகர்கோவில் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் கிரியேட் இணைந்து நடத்திய `இன்றைய பாதுகாப்பான உணவு நாளைய ஆரோக்கிய வாழ்வு' எனும் கருத்தரங்கு நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. இதில் நாகர்கோவில் மகளிர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலர் ஜாஸ்மின் அனைவரையும் வரவேற்றார்.

கிரியேட் மேலாண்மை அறங்காவலர் பொன்னம்பலம் தனது அறிமுக உரையின்போது, ``உணவை வீணாக்கும் நாடுகள் பட்டியலில் நாம் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். உணவு வீணாக்குவது பற்றி நாம் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்தியாவில் இரண்டு பிரச்னை; ஒன்று பசியைப் போக்குவது, அடுத்ததாக உடல் பருமன் பிரச்னை. உணவுப் பிரச்னை ஓரளவு சரியாகிவிட்டது. ஆனால், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உடல் பருமன் பிரச்னை நம் நாட்டில் அதிகம் உள்ளது. முன்பு 2 ரூபாய்க்கு பரல் உப்பு வாங்கினோம். இப்போது 20 ரூபாய்க்கு அயோடின் கலந்த உப்பு வாங்குகிறோம். இப்போது அயோடின் கலக்காத உப்பு விற்ககூடாது என்ற சட்டம் வந்துவிட்டது. அனைத்தும் கார்ப்பரேட்டுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள். எனவே அரசு காய்கறி உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

விருது வழங்கப்பட்டபோது
விருது வழங்கப்பட்டபோது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிகழ்ச்சிக்கு அப்டா தலைவர் பால்ராஜ், பொதுச் செயலாளர் சுதேசன், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நுகர்பொருள் ஆராய்ச்சி கல்வி மற்றும் பயிற்சி மைய தலைவர் துரைசிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில், ``உணவு குறித்த புரிதலை ஏற்படுத்த ஆண்டுதோறும் உலக உணவுத் தினத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்களும் மேற்கொள்ள வேண்டும். அதற்கு அப்டா மார்க்கெட் முன்னுதாரணமாக உள்ளது. தமிழகத்தில் 652 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. அதில் 400-க்கும் அதிகமான திட்டங்கள் உள்ளன. சுமார் 5 லட்சம் டன் இருப்பு வைக்க வசதியுள்ள அனைத்து விற்பனை இடங்களிலும் அரசு சார்பில் நெல் கொள்முதல் நடைபெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொள்முதல் செய்யும் நெல்லுக்கு 17 சதவிகிதம் ஈரப்பதம் இருக்க வேண்டும் என அரசு கூறுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் அதிக மழை பெய்யும் பகுதி. எனவே, நெல்லுக்கான ஈரப்பதத்தை 20 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இயற்கை வேளாண்மை கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழக அரசும் இயற்கை வேளாண்மை கொள்கைகளை அறிவிக்க வேண்டும்.

இடு பொருள்களையும், விளைபொருள்களையும் சந்தைகளில் எடுத்துச் செல்லும் அனைத்துக் கிராம சாலைகளையும் சீர் செய்ய வேண்டும். நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாத்திட வேண்டும்" என்றார்.

உலக உணவுதின கருத்தரங்கு
உலக உணவுதின கருத்தரங்கு

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் சாலமன் ஜீவா பேசுகையில், ``குமரியை தவளைகளின் உலகம் என்பார்கள். முன்பு வயல்வெளிகளில் தவளைகள் கிடக்கும். இப்போது ரசாயன உரம் காரணமாகத் தவளைகளைக் காணவில்லை. மூன்றாம் நாள் போடப்படும் களைக்கொல்லிகளை மட்டுமல்ல நுண்ணுயிரிகளையும் கொன்றுவிடும். எனவே, இயற்கை விவசாய முறைக்கு மாற வேண்டும்" என்றார்

இந்த நிகழ்ச்சியில் இயற்கை வேளாண் மேம்பாட்டுக்கு அரும்பணியாற்றிவரும், `பசுமை விகடன்' இதழுக்கு பாராட்டு தெரிவித்து கேடயம் வழங்கப்பட்டது. மேலும் 35 ரக வாழை இனங்களை மீட்டெடுத்து விவசாயம் செய்துவரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜோ பிரகாஷ், இயற்கை நெல் விவசாயம் செய்துவரும் ஸ்காட் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் சாலமன் ஜீவா ஆகியோருக்கும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஸ்ரீராம், மகிழ் டிரஸ்ட் நிர்வாகி நாகராஜன், பீர் முகமது, விவசாயிகள் ராஜகோபால், கார்த்திக், ஜோ பிரகாஷ், வரபிரசாதம் கெளதமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகர்கோவில் மகளிர் பாதுகாப்பு மைய தலைவர் சுவர்ணலதா நன்றியுரை கூறினார். விழா ஏற்பாடுகளை அப்டா மார்க்கெட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism