Published:Updated:

` `தல'-க்கு சங்கடத்தை ஏற்படுத்திட்டேன்... மன்னித்துவிடுங்கள்'!-இரண்டே நாளில் கழகத்தைக் கலைத்த ரசிகர்

``நான் ஒரு டிசைனர் என்பதால், தல மேலான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இப்படி டிசைன் செய்து வெளியிட்டேன்''.

அஜித் பெயரில் விளம்பரம்
அஜித் பெயரில் விளம்பரம்

அஜித் திராவிடர் முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) என்ற பெயரில் கட்சி (!) ஆரம்பித்து பரபரப்பைக் கிளப்பிய ரசிகர் ஒருவர், ரசிகர்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், 'தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள்' என்று அறிவித்த சம்பவம், மதுரையில் தமாஷாக முடிந்துள்ளது.

அஜித்
அஜித்

சமீபத்தில், சமூக ஊடகங்களில் நடிகர் அஜித் படத்துடன் வந்த தகவல் அனைவரையும் திகைக்கவைத்தது. அதில், அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரை மாநகர மேயர் வேட்பாளராக ரைட் சுரேஷ் என்பவர் போட்டியிடுவதாகவும், அவருக்கு உழைப்பாளி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

'தர்பார்' ஜானர், ரஜினி 'அப்ரோச்', அஜித் 'காம்போ'... - முருகதாஸ் ஸ்பெஷல் ஷேரிங்ஸ்

மேயருக்கு நேரடி தேர்தல் இல்லை, மறைமுகத் தேர்தல் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், யாருடா இது புது ரூட்ல போறது என்று குழம்பவைத்தது மட்டுமில்லாமல், அஜித் மன்ற மாநிலத் தலைமையோ, மாவட்டத் தலைமையோ உள்ளாட்சித் தேர்தல் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாத நிலையில், 'யாரு இந்த தல ரசிகர்?' என்று எல்லோரும் விசாரிக்கத் தொடங்கினார்கள்.

ரசிகர் சுரேஷ்
ரசிகர் சுரேஷ்

நாமும் மதுரையிலுள்ள அஜித் ரசிகர்கள் சிலரிடம் விசாரித்தோம், 'இது யாருன்னு எங்களுக்கே தெரியல சார், எங்க 'தல'யைப் பொறுத்தவரைக்கும் அனைத்துக் கட்சியினரும் அவரின் ரசிகராக இருக்கிறார்கள். நாங்கள் அரசியலை வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறோம். எங்க 'தல'க்கு அதில் இஷ்டமில்லை. இப்படி இருக்கும்போது அவர் படத்தை அசிங்கப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி விரைவில் புகார் கொடுப்போம்' என்றனர்.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ்... மாஸ் ஹீரோக்களை மாற்றிய மேக் ஓவர் படங்கள்!

இரண்டொரு நாளில் வாட்ஸ்அப்பில் போஸ்டர் போட்ட அந்த நபர், ``என் பெயர் சுரேஷ், அஜித்தின் வெறித்தனமான ரசிகன். நான் ஒரு டிசைனர் என்பதால், 'தல' மேலான ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இப்படி டிசைன் செய்து வெளியிட்டேன். போஸ்டர்லாம் போடல. அது இப்படி பிரச்னையாகும்னு நினைக்கல.

அஜித் திமுக
அஜித் திமுக

இதனால் 'தல'க்கு சங்கடத்தை ஏற்படுத்திட்டேன். அதனால் என்னை மன்னித்துவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டு பேசி அனுப்பிய வீடியோ வந்த பிறகுதான், அஜித்தின் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். உள்ளாட்சித் தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்பட்டால், இதுபோல இன்னும் பல அரசியல் காமெடிகளைக் காணலாம் எனப் பேசிவருகிறார்கள், மதுரை மக்கள்.

ராமோஜி பிலிம் சிட்டி - அஜித்... அறை எண்: 715, சித்தாரா ஹோட்டல்