Published:Updated:

`வியாபாரிகளின் பிடியில் தாய்மார்கள் பாலூட்டும் அறை; சுகாதாரமற்ற கழிவறைகள்...' - ஆலங்குளம் அவலம்!

ஆலங்குளம் அவலம்!
News
ஆலங்குளம் அவலம்!

இருக்கைகள், மின்விளக்கு மற்றும் கதவுகளுக்குத் தாழ்ப்பாளற்று பாலூட்டும் அறை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பயணம் மற்றும் பணி நிமித்தமாகப் பாலூட்டும் தாய்மார்கள் வெளியே செல்லும்போது, பேருந்து நிலையங்களில் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. அப்படிக் காத்திருக்கும் நேரத்தில் குழந்தைகளுக்குத் தனிமையில் பாலூட்டுவதற்கு வசதியாகப் பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறை திறக்கப்படும் எனக் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அவர் உத்தரவின் பேரில், அதற்கு அடுத்த மாதமே தமிழகத்தின் பல்வேறு நகராட்சி மற்றும் மாநகராட்சி பேருந்து நிலையங்களில் 351 தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டன. ஒரு நாற்காலி, மேசை, மின்விளக்கு மற்றும் மின்விசிறி ஆகியவை இந்த அறையில் இடம்பெற்றிருந்தன. மேலும், இந்த அறைகளைப் பராமரிப்பதற்காக ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். பொதுமக்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. தற்போது, பெரும்பாலான பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பராமரிப்பின்றி பயன்பாடற்று கிடக்கின்றன. அதனால், பாலூட்டும் தாய்மார்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

ஆலங்குளம் பேருந்து நிலைய தாய்மார்கள் பாலூட்டும் அறை
ஆலங்குளம் பேருந்து நிலைய தாய்மார்கள் பாலூட்டும் அறை

அந்த வகையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் பயன்பாடற்று கிடக்கும் பாலூட்டும் அறையால், பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் தாய்மார்கள் பரிதவிப்புக்கு ஆளாகின்றனர். ஆலங்குளத்திலுள்ள பெருந்தலைவர் காமராசர் பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பேருந்துகளில் சிறு வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் சுகாதாரமற்ற நிலையில் குப்பைக் கூடம் போலக் காட்சியளிக்கிறது. இருக்கைகள், மின்விளக்கு மற்றும் கதவுகளுக்குத் தாழ்ப்பாளற்று பாலூட்டும் அறை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆலங்குளம் பேருந்து நிலைய தாய்மார்கள் பாலூட்டும் அறை
ஆலங்குளம் பேருந்து நிலைய தாய்மார்கள் பாலூட்டும் அறை

அதேபோல, இந்தப் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பிடமும் சுகாதாரமற்று மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கதவுகள் தாழ்ப்பாளின்றி உடைந்து கிடக்கின்றன. இங்குள்ள நான்கு கழிவறைகளில் மூன்று கழிவறைகள் மூடப்பட்டிருக்கின்றன. திறந்திருக்கும் கழிவறையும், அசுத்தமாகச் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது.

ஆலங்குளம் பேருந்து நிலைய கழிவறை
ஆலங்குளம் பேருந்து நிலைய கழிவறை
ஆலங்குளம் பேருந்து நிலைய கழிவறை
ஆலங்குளம் பேருந்து நிலைய கழிவறை

அதனால், அந்த கழிவறையைப் பயன்படுத்தும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, தாய்மார்கள் பயன்பெறும் வகையில் பாலூட்டும் அறைகளையும், பயணிகள் பயன்பெறும் வகையில் கழிவறைகளையும் அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.