Published:Updated:

ரெட் அலர்ட் டு மஞ்சள் அலர்ட்... என்றாலும் தீவிரம் குறையாத மழை! - நீலகிரி நிலவரம்

ஊட்டி மழை

ஏற்கெனவே அணைகள் அனைத்தும் நிரம்பிவழியும் நிலையில் தொடர்ந்து மழை நீடித்துவருவதால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. கடுமையான குளிர் நிலவுவதால் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. நீலகிரியிலும் மழை தீவிரமடைந்து கடந்த மூன்று நாள்களாக இடைவிடாமல் கனமழை பெய்துவருகிறது. கடந்த இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது மஞ்சள் அலர்ட் என்றாலும் மழையின் தீவிரம் குறையவில்லை. மழை காரணமாக, நீலகிரியில் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

ooty rain
ooty rain

மாவட்டம் முழுவதுமே பரவலாக கனமழை பொழிந்தாலும் நீர்பிடிப்புப் பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 200 மில்லிமீட்டர் மழையும் அப்பர் பவானியில் 140 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது. மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 1957.5 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. ஏற்கெனவே அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் நிலையில் தொடர்ந்து மழை நீடித்துவருவதால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருக்கிறது. கடுமையான குளிர் நிலவுவதால் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50- க்கும்‌ மேற்பட்டோர் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் அபாயமுள்ள பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!