Published:Updated:

நாகூர்: நிதிச் சுமையால் பாதியில் நின்ற பள்ளிக் கட்டடப் பணிகள்! நெகிழ வைத்த முன்னாள் மாணவர்களின் உதவி

முன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்

நாகூரில் பணமில்லாததால் பள்ளிக் கட்டுமானப்பணி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்தப் பணிகள் தொடர முன்னாள் மாணவர்கள் உதவியிருக்கிறார்கள்.

நாகூரில் கஜா புயலில் சிதலமடைந்த பள்ளிக் கட்டடத்தைப் புனரமைக்க முயன்றபோது, கொரோனா குறுக்கிட்டதால் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியவில்லை. பணப் பற்றாக்குறையால் பாதியில் நின்ற கட்டட நிலையை அறிந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடி நிதி அளித்துள்ள நிகழ்வு பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

முன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்

நாகை மாவட்டம் நாகூரில் அரசு உதவிபெறும் கௌதியா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தொடக்கப் பள்ளி பிரிவு கட்டடங்கள் 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் பெருமளவு சேதமடைந்தன. இதனால், மாணவர்களுக்குப் போதிய வகுப்பறைகள் இல்லாமல் பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே, பள்ளி நிர்வாகம் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் நிதி உதவியுடன் சிதலமடைந்த பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை அமைக்கும் பணியைச் செய்து வந்தனர்.

இந்தச் சூழலில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிதிச் சுமை ஏற்பட்டு கட்டுமானப் பணியைப் பாதியில் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதையறிந்த அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் வாட்ஸ் அப் குழு மூலம் ஒன்றிணைந்து பாதியில் தடைப்பட்ட பள்ளியின் கட்டுமான பணிக்காக நிதி திரட்டினர். முதற்கட்டமாக, பள்ளியின் தாளாளர் அபுதல்ஹாவிடம் 1 லட்சம் ரூபாய் நிதியை அவர்கள் வழங்கியுள்ளனர். தொடர்ந்து உதவிடவும் உறுதியளித்துள்ளனர்

முன்னாள் மாணவர்கள்
முன்னாள் மாணவர்கள்

போதுமான நிதி இன்றி பாதியில் நின்ற பள்ளி கட்டுமானப் பணிக்காகப் பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து நிதியுதவி செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு