Published:Updated:

வற்றாத குளமாகக் காட்சியளிக்கும் அம்பத்தூர் மயான பூமி - சடலங்கள் நீரில் எடுத்துச் செல்லப்படும் அவலம்!

அம்பத்தூர் இந்து மயான பூமி

அம்பத்தூர் இந்து மயான பூமியில், சுமார் 2 அடி முதல் 3 அடி வரையில் தேங்கி நிற்கும் மழைநீரில்தான், மக்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் சடலங்களை சுமந்துகொண்டு வருகிறார்கள்.

வற்றாத குளமாகக் காட்சியளிக்கும் அம்பத்தூர் மயான பூமி - சடலங்கள் நீரில் எடுத்துச் செல்லப்படும் அவலம்!

அம்பத்தூர் இந்து மயான பூமியில், சுமார் 2 அடி முதல் 3 அடி வரையில் தேங்கி நிற்கும் மழைநீரில்தான், மக்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் சடலங்களை சுமந்துகொண்டு வருகிறார்கள்.

Published:Updated:
அம்பத்தூர் இந்து மயான பூமி

அம்பத்தூர் டன்லப் வானகரம் ரோட்டில் அமைந்திருக்கிறது இந்து மயான பூமி. இந்த மயானம் தண்ணீர் சூழ்ந்த தீவுபோல காட்சியளிக்கிறது. சுமார் 2 அடி முதல் 3 அடி வரையில் தேங்கி நிற்கும் அந்த மழைநீரில்தான், மக்கள் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் சடலங்களைச் சுமந்துகொண்டு மயானத்துக்கு வருகிறார்கள். குளம்போலத் தேங்கியிருக்கும் மழைநீரில், இறுதிச்சடங்குகள் செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகிவருகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். மழை குறைந்து ஏறத்தாழ எல்லா இடங்களிலும் தேங்கிய தண்ணீர் வற்றிவரும் நிலையில், இங்கு மட்டும் வடிய இடமின்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்து மயான பூமி
இந்து மயான பூமி

அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இது குறித்து விசாரித்தோம். ``அந்தச் சுடுகாடு எப்போவுமே மழைக்காலத்துல இப்படித்தான் இருக்கும். நான் அம்பத்தூர்ல வேலைக்குப் போற வழி இதுங்கிறதால தினமும் இதைத் தாண்டித்தான் போறேன். போன வெள்ளிக்கிழமை வரைக்கும் விடாம மழை இருந்தது. அப்புறம் மழை பெருசா இல்லை. இருந்தாலும் இந்த இடத்துல தண்ணீர் வடியலை. கிட்டத்தட்ட மூணு நாள் முன்னாடி, கார்ப்பரேஷன் ஆளுங்க பம்ப்வெச்சு தண்ணீர் எடுத்தாங்க. அப்படியும் நீர் வத்தல!" என விவரித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்பத்தூர் இந்து மயான பூமியில் தேங்கி நிற்கும் தண்ணீர்
அம்பத்தூர் இந்து மயான பூமியில் தேங்கி நிற்கும் தண்ணீர்

தண்ணீர் தேங்கிக் கிடக்கும் அந்த மயான பூமிக்கு நல்லடக்கம் செய்ய, உடலைத் தண்ணீரில் சுமந்து செல்லும் காட்சி நம் மனதை உலுக்கியது. இது தொடர்பாக அம்பத்தூர் நகராட்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். நகராட்சியின், உதவிப் பொறியாளர் விக்டர் ``இந்தச் சுடுகாட்டோட மயான பூமி (Burial ground ) ரோடுலேந்து ஒன்றரை அடி கீழ இருக்கு. பொதுவாவே அது பள்ளமான இடம்தான். அதுனால மழை வந்தா தண்ணீர் தேங்குவது இயல்பு. அது போக, மயான பூமிக்குப் பின்னாடி அம்பத்தூர் ஏரி இருக்கு. இப்போ தேங்கி இருக்கற மழைநீரை மோட்டார் மூலம் எடுத்து, அந்த ஏரிக்கு திருப்பிவிட்டிருக்கோம். மழை விடாம பெய்வதால, ஊற்று மாறி உருவாகியிருக்கு. அதைச் சீரமைக்க நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism