Published:Updated:

பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல், அணிவகுத்த பைலட் ஆம்புலன்ஸ்கள்; ஒரு மணி நேர நெகிழ்ச்சிப் பயணம்!

ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 ஆம்புலன்ஸ்கள் பைலட் ஆம்புலன்ஸ்களாக செயல்பட்டு, முன்னும் பின்னும் அணிவகுத்து வந்தன.

பிறந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல், அணிவகுத்த பைலட் ஆம்புலன்ஸ்கள்; ஒரு மணி நேர நெகிழ்ச்சிப் பயணம்!

குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 ஆம்புலன்ஸ்கள் பைலட் ஆம்புலன்ஸ்களாக செயல்பட்டு, முன்னும் பின்னும் அணிவகுத்து வந்தன.

Published:Updated:
ஆம்புலன்ஸ் டிரைவர்கள்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள தாந்தநாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவித்ரன்- தன்யா தம்பதி. கர்ப்பிணியாக இருந்த தன்யாவை பிரசவத்திற்காக கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் தன்யா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். இந்த நிலையில், அந்தக் குழந்தைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, மாலை வேளையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சுவாசிக்கவே சிரமப்பட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

அவசர அவசரமாக ஆம்புலன்ஸை வரவழைத்து குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையின் நோய் பாதிப்பு தீவிரத்தை உணர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அக்கீம், மிக சாதுர்யமாக ஆம்புலன்ஸை இயக்கி ஒரு மணி நேரத்தில் கோவையில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை சேர்த்திருக்கிறார். மலைப்பாதையைக் கடந்து இரண்டு மணி நேரத்தில் சென்றடைய வேண்டிய தொலைவை, ஒரு மணி நேரத்தில் சென்றடைந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நெகிழ்ச்சி பயணம் குறித்து நம்மிடம் பேசிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அக்கீம், ``குழந்தையுடன் பெற்றோர், உறவினர் ஒருவர் மற்றும் செவிலியர் ஒருவரை அழைத்துக் கொண்டு இரவு 7.05 மணிக்கு கோத்தகிரியில் இருந்து கிளம்பினோம். கொண்டை ஊசி வளைவுகள் நிறைந்த கோத்தகிரி மலைப்பாதையை கடந்து மேட்டுப்பாளையம் ஓடந்துறை பகுதிக்குச் சென்றபோது போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியது. மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 ஆம்புலன்ஸ்கள் பைலட் ஆம்புலன்ஸ்களாக செயல்பட்டு முன்னும் பின்னும் அணிவகுத்துவந்தன. நெரிசலில் சிக்காமல் காரமடை வரை வந்து வழி அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம்
ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம்

தொடர்ந்து கோவில்பாலையம், சரவணம்பட்டி பகுதிகளில் இருந்து வந்த 3 ஆம்புலன்ஸ்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சைரனை ஒலிக்கச் செய்து அணிவகுத்து வந்தன. சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறையினரின் உதவியுடன் 8.13 மணிக்கு குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தோம். தற்போது உள்ள சூழலில் இந்த 58 கிலோமீட்டர் தூரத்தை கடக்க 3 மணி நேரம் ஆகும். ஆனால் மக்கள் தந்த ஒத்துழைப்பால் 68 நிமிடங்களில் போய்ச்சேர முடிந்தது. தற்போது அந்த குழந்தை நலமாக இருக்கிறது. இந்த முயற்சியில் பங்கெடுத்த எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.