Published:Updated:

நெல்லை: ``எடப்பாடி அணியினர், வீடு வாடகைக்கு அணுக வேண்டாம்!" - துணை நடிகர் வைத்த சர்ச்சை போர்டு

துணை நடிகர் ஐசக் வைத்த சர்ச்சை போர்டு
News
துணை நடிகர் ஐசக் வைத்த சர்ச்சை போர்டு

நெல்லையைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன் என்பவர் தன் வீட்டில் வைத்திருக்கும் சர்ச்சை போர்டு வைரலாகியுள்ளது.

நெல்லை: ``எடப்பாடி அணியினர், வீடு வாடகைக்கு அணுக வேண்டாம்!" - துணை நடிகர் வைத்த சர்ச்சை போர்டு

நெல்லையைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன் என்பவர் தன் வீட்டில் வைத்திருக்கும் சர்ச்சை போர்டு வைரலாகியுள்ளது.

Published:Updated:
துணை நடிகர் ஐசக் வைத்த சர்ச்சை போர்டு
News
துணை நடிகர் ஐசக் வைத்த சர்ச்சை போர்டு

வீடு வாடகைக்குக் கொடுப்பவர்கள் போடும் கண்டிஷன்கள் சில நேரங்களில் சர்ச்சையைக் கிளப்புவது உண்டு. குறிப்பிட்ட மொழி பேசுபவர்கள், சாதியைச் சேர்ந்தவர்கள், உணவு சாப்பிடுபவர்கள், மதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை என சிலர் சொல்லுவது வில்லங்கமாகியிருக்கிறது. அந்த வகையில் நெல்லையைச் சேர்ந்த திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன் என்பவர் தன் வீட்டில் வைத்திருக்கும் சர்ச்சை போர்டு வைரலாகியுள்ளது.

துணை நடிகர் ஐசக் பாண்டியன்
துணை நடிகர் ஐசக் பாண்டியன்

மாரி, எந்திரன், எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருப்பவர், நெல்லையைச் சேர்ந்த ஐசக் பாண்டியன். பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலையில் உள்ள அவரது வீட்டின் மாடிப்பகுதியை வாடகைக்குவிடத் திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர் வைத்திருக்கும் போர்டை படித்துவிட்டு சிலர் சிரித்தபடியும் வேறு சிலர் எரிச்சலுடனும் செல்கிறார்கள்.

ஐசக் பாண்டியனின் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் போர்டில், `வீடு வாடகைக்கு... குடிகாரர், வட மாநிலத்தவர், எடப்பாடி அ.தி.மு.க-வினர் அணுக வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வீட்டில் இருந்த அவரிடம் பேசினோம். “எனக்கு இரண்டு மகன்கள். ஒரு மகனின் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டேன். மற்றொரு மகனின் வீட்டின் பின்புறப் பகுதியை வாடகைக்கு விட இருக்கிறேன். அதற்காகவே இந்த போர்டை வைத்திருக்கிறேன்.

ஐசக் பாண்டியனும் போர்டும்
ஐசக் பாண்டியனும் போர்டும்

எனக்கு சமூக அக்கறை இருப்பதன் காரணமாகவே இந்த போர்டை வைத்திருக்கிறேன். குடிதான் இந்த சமூகத்தைச் சீரழிக்கிறது. குறிப்பாக இளைஞர்களைக் குடிப்பழக்கம் வெகுவாக பாதித்து விட்டது. அதனால்தான் குடிகாரர்களுக்கு வீடு கொடுப்பதில்லை என முடிவெடுத்தேன். அதே போல நாள்தோறும் நிறைய வட மாநிலத்தவர் இங்கு வருவதால் நமது கலாசாரமும் பண்பாடும் கெட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களால் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் சிக்கல் ஏற்படும் ஆபத்து இருப்பதால் அவர்களுக்கு வீடு கொடுக்க விரும்பவில்லை.

தமிழகத்தில் மதுவை ஒழிப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. இப்போது,’தி.மு,க-வினரிடம்தான் மது கம்பெனி இருக்கிறது’ என்று பேசும் எடப்பாடி அ.தி.மு.க-வினர் தங்களின் ஆட்சிக்காலத்தில் அதை ஒழிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதனால்தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு கொடுக்க விரும்பவில்லை” என்றார். வீட்டை வாடகைக்கு விடுவதற்கு வைத்துள்ள சர்ச்சை போர்டு படம் வைரலாகி வருகிறது.