Published:Updated:

புதிய அமைச்சரவை: கழற்றிவிடப்பட்ட காவிரி டெல்டா... 14 மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை!

M.K. Stalin
M.K. Stalin ( Photo: Vikatan / Vijay.T )

தொகுதிகளை வாரிக் கொடுத்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கும் கைவிரித்திருக்கிறார் ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். அவருடன் 34 அமைச்சர்களும் பொறுப்பேற்கிறார்கள். தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் 24 மாவட்டங்களுக்கு மட்டுமே பிரநிதித்துவம் கிடைத்துள்ளன.

சென்னை 3
காஞ்சிபுரம் 1
திருவள்ளூர் 1
ராணிப்பேட்டை 1
வேலூர் 1
கடலூர் 2
விழுப்புரம் 1
கள்ளக்குறிச்சி 1
திருவண்ணாமலை 1
திருச்சி 2
நாமக்கல் 1
ஈரோடு 1
திருப்பூர் 2
திண்டுக்கல் 2
கரூர் 1

முதல் முறை அமைச்சர்கள்
முதல் முறை அமைச்சர்கள்

புதுக்கோட்டை 2
விருதுநகர் 2
சிவகங்கை 1
தூத்துக்குடி 2
ராமநாதபுரம் 1
கன்னியாகுமரி 1
மதுரை 2
பெரம்பலூர் 1
நீலகிரி 1

இந்த மாவட்டங்களில் சென்னைக்கு 3 அமைச்சர் பதவிகளும் கடலூர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 2 அமைச்சர் பதவிகளும் கிடைத்துள்ளன.

மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்களுக்கு அமைச்சர் பதவி இல்லை.
செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், தர்மபுரி, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கிடைக்கவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இவற்றில் கோவை மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓர் இடத்தில் கூட தி.மு.க வெற்றிபெறவில்லை. அதனால் அமைச்சர் பதவி இல்லை. ஆனால், தொகுதிகளை வாரிக் கொடுத்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூருக்கும் கைவிரித்திருக்கிறார் ஸ்டாலின்.

அடுத்த கட்டுரைக்கு