Published:Updated:

போராட வந்த மாற்றுத்திறனாளி கணவர், வீடியோ காலில் கண்கலங்கிய மனைவி; நெகிழ்ச்சியான சம்பவம்!

போராட்டத்தை மனைவிக்கு வீடியோ காலில் காட்டும் நாகூர்கனி

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்றுத்திறனாளி கணவரை, வீடியோகாலில் பார்த்து, `என் கணவருக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக்கொடுங்கள்’ என மனைவி கண்ணீர்விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

போராட வந்த மாற்றுத்திறனாளி கணவர், வீடியோ காலில் கண்கலங்கிய மனைவி; நெகிழ்ச்சியான சம்பவம்!

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்றுத்திறனாளி கணவரை, வீடியோகாலில் பார்த்து, `என் கணவருக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக்கொடுங்கள்’ என மனைவி கண்ணீர்விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Published:Updated:
போராட்டத்தை மனைவிக்கு வீடியோ காலில் காட்டும் நாகூர்கனி

ராமநாதபுரத்தில் காது மற்றும் வாய் பேச இயலாதோர் நல சங்கத்தின் சார்பில் 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விசில் அடித்து, செய்கை மொழியில் கோஷம் எழுப்பினர். தான் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதால், முடித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருவதாக போலீஸார் மூலம் போராட்டத்தில் ஈடுட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆட்சியர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அனைவரும் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இந்தப் போராட்ட நிகழ்வை செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தோம்.

வீடியோ காலில் பேசிய சுரேஹாராணி
வீடியோ காலில் பேசிய சுரேஹாராணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி ஒருவர், தன் மனைவியிடம் வீடியோ காலில், போராட்டம் நடைபெறுவதைக் காண்பித்து செய்கை மூலம் பேசிக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி மிகவும் நெகிழ்ச்சியாக இருக்க, அவரின் பெயர், விபரம் குறித்து கேட்டபோது, வெள்ளை காகிதத்தில் அவரின் பெயர் நாகூர்கனி, மனைவி பெயர் சுரேஹாராணி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மீன்பிடி கூலித்தொழில் செய்து வருவதாக எழுதிக் காண்பித்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது, `என் மனைவியிடம் நான் சாப்பிட்டுவிட்டேன், பத்திரமாக இருக்கிறேன் என்பதைச் சொல்லுங்கள்’ என சைகை மொழியில் சொன்னபடி செல்போனை நம்மிடம் கொடுத்து விட்டார். வீடியோ காலில் இருந்த அவரின் மனைவி, நாம் போசுவதற்குள், `அவர் டீ குடித்துவிட்டாரா, சாப்பிட்டாரா? அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்’ எனக் கண்ணீர் விட, `அழாமல் பேசு’ என அவரின் கணவர் செய்கை காட்டினார்.

Love (Representational Image)
Love (Representational Image)
Image by Gerd Altmann from Pixabay

கண்ணீரை துடைத்துக்கொண்ட மனைவி, `எனக்கு பேச வரும், ஆனால், காது கேட்காது. நீங்கள் சொல்வதை உங்கள் வாய் அசைவை வைத்துதான் புரிந்துகொள்ள முடியும். நான் அவரை விட்டு பிரிந்ததில்லை. வேலைக்குக்கூட ஒன்றாகத்தான் செல்வோம். இன்று நானும் அவருடன் போராட்டத்துக்கு வந்திருக்க வேண்டியது, எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் என்னால் வரமுடியவில்லை. நான் பக்கத்தில் இருந்தால் அவருக்கு சரியான நேரத்துக்கு சாப்பாடு, டீ வாங்கி கொடுத்து அருகில் இருந்து கவனித்துக்கொண்டிருப்பேன்.

அவருக்கு வெளி உலகம் தெரியாது. தயவு செய்து அவருக்கு சாப்பிட ஏதாவது வாங்கிக் கொடுத்து, பத்திரமாக அனுப்பி வையுங்கள்’ என்றவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. `நிச்சயம் இந்தப் போராட்டம் வெற்றியடையும், பத்திரமாக வீடு வந்து சேர்வார்’ என அவருக்கு நம்பிக்கை அளித்துவிட்டு செல்போனை நாகூர்கனியிடம் வழங்கினோம்.

கட்டைவிரலை உயர்த்திக் காட்டி வெற்றியுடன் வருவதாகக் கூறிய நாகூர்கனி
கட்டைவிரலை உயர்த்திக் காட்டி வெற்றியுடன் வருவதாகக் கூறிய நாகூர்கனி

நமக்கு நன்றி தெரிவித்த அவர், கட்டைவிரலை உயர்த்திக் காட்டி, வெற்றியுடன் வருகிறோம் என்று மனைவியிடம் தெரிவித்தார். அந்தக் காட்சி, அங்கு கூடியிருந்தவர்களை எல்லாம் கண்கலங்கச் செய்தது. மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அனைவரும் கலைந்து சென்றனர்.