Published:Updated:

வேதாரண்யம்: `தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை, மரியாதை’ -நெகிழ வைத்த ஆசிரியை வசந்தா

தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி
தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி

ஆசிரியை வசந்தா, ``இந்த இக்கட்டான நேரத்தில் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறோம். ஏழைகள் சிரிப்பில்தானே இறைவனைக் காணமுடியும்" என்றார்.

கொரோனா ஊரடங்கில் சிறப்பாகச் செயல்பட்ட வேதாரண்யம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து ,பொன்னாடை போர்த்தி ஆரத்தி எடுத்து மரியாதை செய்ததோடு விருந்தும் அளித்துள்ளார் ஆசிரியை வசந்தா சித்ரவேலு.

தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி
தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையைச் சேர்ந்தவர் ஆசிரியை வசந்தா சித்திரவேலு. இவர் வேதாரண்யம் அருகே அண்டர்காடு சுந்தரேசவிலாஸ் உதவித் தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் சித்ரவேலும் ஆசிரியர்தான்.

`கொரோனா நிவாரண நிதியளியுங்கள்’ எனத் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் ரூ.50,000/- வழங்கியவர் வசந்தாதான். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கியிருக்கிறார் தினமும் 200 நபர்களுக்கு இலவசமாக உணவளிக்கிறார்.

கொரோனா விழிப்புணர்வு பொருள்களான முகமூடி, மஞ்சள் தூள், சோப்பு, அகல், திரி, எண்ணெய் ஆகியவை அடங்கிய காகிதப் பைகளை சுமார் 5,000 பேருக்கு வழங்கியுள்ளார். மேலும், இதுபோல பொருள்களை அரசு அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியுள்ளார்.

இத்தகைய சேவைப் பணியில் நேற்று வேதாரண்யம் நகராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது பணியைைப் பாராட்டி பொன்னாடை, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தார். அதன்பின் அனைவருக்கும் சுவையான விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான்பாபு தலைமை வகித்தார். வேதாரண்யம் டி.எஸ்.பி சபியுல்லா கலந்துகொண்டு, "கொரோனா ஊரடங்கு ஆரம்பித்தது முதல் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து உணவும் ஆதரவற்றவர்களுக்கு உதவித்தொகையும் நான்கு மாதங்களாக நாள்தோறும் வழங்கி வரும் ஆசிரியை வசந்தா சித்திர வேலுவின் சமுதாயப் பணியைப் பாராட்டினார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி
தூய்மைப் பணியாளர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி

இதுபற்றி வசந்தாவிடம் கேட்டபோது, ``இந்த இக்கட்டான நேரத்தில் எங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறோம். ஏழைகள் சிரிப்பில்தானே இறைவனைக் காண முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு