Published:Updated:

`போட்டித் தேர்வுக்குத் தயாராவது எப்படி?' - கோவை மாணவர்களுக்கு விகடனின் ஓர் இலவசப் பயிற்சி முகாம்

கோவை பயிற்சி முகாம்

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி என்ற இலவச பயிற்சி முகாமை நடத்த உள்ளனர்.

`போட்டித் தேர்வுக்குத் தயாராவது எப்படி?' - கோவை மாணவர்களுக்கு விகடனின் ஓர் இலவசப் பயிற்சி முகாம்

ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து கோவை இந்துஸ்தான் கல்லூரியில் போட்டித் தேர்வுக்கு தயாராவது எப்படி என்ற இலவச பயிற்சி முகாமை நடத்த உள்ளனர்.

Published:Updated:
கோவை பயிற்சி முகாம்

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2 தேர்வுகளில் வெல்வது எப்படி? என்று இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஏற்கெனவே சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

கோவை பயிற்சி முகாம்
கோவை பயிற்சி முகாம்

இந்நிலையில், வருகிற அக்டோபர் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாட உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ் சமீரன் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “பள்ளியில் படிக்கும்போதே எனக்கு சிவில் சர்வீஸ் மீது விருப்பம் இருந்தது. மருத்துவப் படிப்பு படிக்கும்போது, என் சீனியர்கள் பலரும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தனர். அவர்களுடன் சேர்ந்துதான் தேர்வு குறித்துக் கூடுதலாக தெரிந்து கொண்டேன்.

டாக்டர் ஜி.எஸ் சமீரன் ஐ.ஏ.எஸ்
டாக்டர் ஜி.எஸ் சமீரன் ஐ.ஏ.எஸ்

மருத்துவப் படிப்பு முடிந்தவுடன், 2011ம் ஆண்டு யூ.பி.எஸ்.சி தேர்வை நான் எதிர்கொண்டேன். அதில் இந்திய அளவில் 66வது இடம் பிடித்து வெற்றி பெற்றேன். சரியான பயிற்சி, அதற்கு தகுந்த நண்பர்களுடன் எடுத்த கூட்டு முயற்சி எல்லாமே எனக்குக் கைக்கொடுத்தன.

தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிட்டாலே சாதனையாக நினைப்பார்கள். உண்மையில் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு தான் தினம் தினம் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். நான் மருத்துவப் படிப்பை படித்திருந்தாலும், சிவில் சர்வீஸ் வந்த பிறகு நிறைய துறைகளில் பணியாற்ற வேண்டியுள்ளது. சப் – கலெக்டராக பணியாற்றிய காலகட்டத்துக்கு பின் நான் மீன்வளத்துறையில் கூடுதல் இயக்குநர், திட்ட இயக்குநர், இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறேன்.

மீனவர்கள்
மீனவர்கள்

மீனவர்களின் வாழ்க்கை, கலாசாரம் எப்படி இருக்கிறது, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம் என்பதெல்லாம் எனக்கு புதிய அனுபவங்களாக இருந்தன.

மீனவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அவர்களை காப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். மேற்கு கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு (200 நாட்டிக்கல் மைல்) செல்வார்கள். அங்கு தகவல் பரிமாற்ற வசதி எல்லாம் மிகவும் குறைவு.

கடலோரம்
கடலோரம்

புயல் காலங்களில் இது மிகவும் சவாலாக இருந்தது. அதற்காக இஸ்ரோ, பி.எஸ்.என்.எல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து நாட்டிலேயே முதல்முறையாக மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் கொடுத்தோம். அதன் மூலம் பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை தடுக்க முடிகிறது. எனக்கு மிகவும் திருப்தியான பணியாக அது இருந்தது.

இது சிறிய எடுத்துக்காட்டுதான். மக்களுக்காகப் பணியாற்றும் பிரமாண்டமான வாய்ப்பு தான் இது.  கொரோனா காலத்தில் தொடங்கி வருவாய்த்துறையில் பணியாற்றிய வரை என் 10 ஆண்டு கால பணியில் நிறைய அனுபவங்கள் உள்ளன.

சமீரன்
சமீரன்

35 ஆண்டுகள் பணியில் இருக்கும்போது, நமது நல்ல முடிவுகளால் பல்வேறு மக்களின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு உயர்த்த நாம் கருவியாக இருக்க முடியும். இதுபோன்ற சுவராஸ்யமான, நுட்பமான தகவல்களை எல்லாம் நேரில் சொல்கிறேன்.” என்றார்.

கோவை மாநகர காவல் ஆணையர் வே. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் கூறுகையில், “போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்கள் எப்படி தயாராவது, இதன் மூலம் என்னென்ன சேவைகள் செய்ய முடியும் என நிறைய அனுபவங்களை பகிர உள்ளோம். என்னுடைய 17 ஆண்டு ஐ.பி.எஸ் சேவை காலகட்டத்தில் நிறைய இக்கட்டான, சவால் நிறைந்த சூழல்களை எதிர்கொண்டிருக்கிறேன். 2011-12 நான் திருப்பூர் மாவட்ட எஸ்.பி யாக பணியாற்றிய போது நொய்யல் ஆற்றில் திடீரென பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நொய்யல் ஆற்றோரம் ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் இருந்தன. அந்த மக்கள் எல்லாம் இந்த வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி மின்சாரம் எல்லாம் துண்டித்துவிட்டு, என்னுடைய அதிரடிப் படையுடன் தண்ணீரில் இறங்கி மீட்புப் பணியை ஆரம்பித்தோம்.

வே. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்
வே. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

என்ன நடக்குமோ என்கிற ஓர் அச்சம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால், காலைக்குள் 400க்கும் மேற்பட்டோரை மீட்டுவிட்டோம். துரதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிரிழந்துவிட்டனர். அதேநேரத்தில் 400 பேரை காக்க முடிந்தது. இதுபோன்ற நிறைய உணர்ச்சிகரமான அனுபவங்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பணிகாலத்தில் இருக்கும். அந்த அனுபவங்கள் குறித்தெல்லாம் நேரில் சந்தித்து பேசுவோம்.” என்றார்.

கோவை மாநகராட்சி ஆணையர் மு. பிரதாப் ஐ.ஏ.எஸ் கூறுகையில், “தற்போது அரசாங்கப் பணி என்பது, இளைஞர்கள் மத்தியில் அதிகம் வசீகரிக்கும் துறையாக உள்ளது. 1980, 90களை விட இப்போது பள்ளி, கல்லூரி படிக்கும்போதே போட்டித் தேர்வுகளை எழுதி அரசாங்கப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளனர். அரசாங்கப் பணியை பொறுத்தவரை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற குடிமைப் பணிகள் உயர்ந்த பணிகளுக்கான தேர்வுகள் மத்திய தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

மு. பிரதாப் ஐ.ஏ.எஸ்
மு. பிரதாப் ஐ.ஏ.எஸ்

அவற்றில் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் நிறைய சந்தேகங்கள், அச்சம், குழப்பம் மாணவர்களுக்கு இருக்கும். அதில் வெற்றி பெற்றவர்கள் அந்த அனுபவங்களை கூறும்போதுதான், மாணவர்களுக்கு அது விலகி தன்னம்பிக்கை பிறக்கும். முதல்நிலைத் தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும், முதன்மைத் தேர்வுக்கு என்ன புத்தகங்கள் படிக்க வேண்டும், நேர்காணலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பல்வேறு நுணுக்கங்கள் உள்ளன.

அரசுப் பணிக்கு வந்தப்பிறகு கஜா புயல் காலக்கட்டத்தில் பணியாற்றிய அனுபவங்கள், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2022 உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றிய அனுபவங்கள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றியபோது 30 நாள்களில் 1,000 பண்ணைக்குட்டைகளை செய்து உலக சாதனை படைத்தோம்.

கஜா புயல் அனுபவம்
கஜா புயல் அனுபவம்

மாநகராட்சிக்கு வந்தப் பிறகு அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைப்பது எப்படி, மக்கள் பிரதிநிதிகளுடன் எப்படி பணியாற்றிய வேண்டும் போன்ற பல்வேறு அனுபவங்களை நேரில் பகிர ஆர்வமாக உள்ளேன்.” என்றார்.