Published:Updated:

விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசனின் தாயார் மறைவு - முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

திருமதி சரோஜா பாலசுப்ரமணியம்

``திரு.சீனிவாசன் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" - முதல்வர் ஸ்டாலின்

விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசனின் தாயார் மறைவு - முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

``திரு.சீனிவாசன் அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" - முதல்வர் ஸ்டாலின்

Published:Updated:
திருமதி சரோஜா பாலசுப்ரமணியம்

ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் (84), ஞாயிற்றுக்கிழமை 2022, நவம்பர் 6-ம் தேதி காலை 07.30 மணிக்கு இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் தாயாரும், பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்றறிந்து வேதனை அடைந்தேன். அன்பு அன்னையை இழந்து தவிக்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது

விகடன் குழும இயக்குநர் பா.சீனிவாசனின் தாயார் மறைவு - முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில்,"விகடன் குழும தலைவர், திரு.சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , விகடன் குழுமத்திற்கும் அ.தி.மு.க சார்பாக எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார்

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

மேலும், தெலங்கானா ஆளுநரும், முன்னாள் பா.ஜ.க தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது இரங்கல் அறிக்கையில், "ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரும், ஜூனியர் விகடன் நிறுவனருமான அமரர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும்,திரு.சீனிவாசன் அவர்களின் தாயாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன்.

தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு.சீனிவாசன் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

அதேபோல பா.ம.க கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்,"விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன் அவர்களின் தாயார் சரோஜா பாலசுப்பிரமணியன் அவர்கள் சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறர்.

 மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், "விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களது தாயாரும் அமரர் பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி.சரோஜா பாலசுப்ரமணியன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்
பேராசிரியர்.தமிழச்சி தங்கபாண்டியன்

திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், "பாரம்பரியம் மிக்க விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு. சீனிவாசன் அவர்களது தாயாரும் திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் துணைவியாருமான திருமதி. சரோஜா பாலசுப்ரமணியன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வேதனையுற்றேன். தாயாரை இழந்து தவிக்கும் திரு. சீனிவாசன் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் விகடன் நிறுவன ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனவும் பதிவிட்டிருக்கிறார்கள்.

 முன்னால் முதல்வர் ஓபிஎஸ்
முன்னால் முதல்வர் ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "பிரபல பத்திரிகையாளரும், விகடன் குழுமத்தின் உரிமையாளருமான மறைந்த திரு. எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களின் மனைவி திருமதி சரோஜா பாலசுப்பிரமணியன் அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தாயை இழந்து வாடும் அவரது மகனும், விகடன் குழுமத்தின் மேலாண்மை இயக்குநருமான திரு. பா. சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டிருக்கிறார்.

வேலுமணி
வேலுமணி

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி, "விகடன் குழும தலைவர், திரு. சீனிவாசன் அவர்களின் தாயார் திருமதி.சரோஜா பாலசுப்பரமணியம் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், விகடன் குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.