Published:Updated:

ஆனந்த விகடன் நடத்திய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் கலந்துகொண்ட கோவை மாணவர்கள்

பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள்

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து கோவையில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமை நடத்தியது.

ஆனந்த விகடன் நடத்திய போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்: ஆர்வத்துடன் கலந்துகொண்ட கோவை மாணவர்கள்

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து கோவையில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாமை நடத்தியது.

Published:Updated:
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள்

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய UPSC, TNPSC GROUP I, II தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்,

பிரதாப் ஐ.ஏ.எஸ், பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சமீரன் ஐ.ஏ.எஸ்
பிரதாப் ஐ.ஏ.எஸ், பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சமீரன் ஐ.ஏ.எஸ்

கோவை மாநகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் சத்திய ஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வழிகாட்டினர். பயிற்சி முகாமில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர்.

முதலில் கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் சத்திய ஸ்ரீ பூமிநாதன் மாணவர்களிடையே பேசினார். மத்திய அரசு நடத்தும் தேர்வுகள் பற்றிய விரிவான அறிமுகத்தை கொடுத்தார். அடுத்து மாணவர்களிடையே பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஐ.ஏ.எஸ் ' மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் பங்களிப்பும், வெற்றி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில். தமிழகம் ஒரு முற்போக்கு சிந்தனையை கொண்ட மாநிலம்.

பிரதாப் ஐ.ஏ.எஸ்
பிரதாப் ஐ.ஏ.எஸ்

கல்வி மற்றும் அடிப்படை வசதிகளில் பிற மாநிலங்களை விட சிறந்து விளங்குகிறது. ஆனால் தமிழக மாணவர்கள் ஏன் பெரும் அளவில் யுபிஎஸ்சி தேர்வில்  தேர்ச்சி பெறுவதில்லை என்று புரியவில்லை. தேர்வுகளுக்கு படிப்பதற்கு முன் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்திய தேர்தல்களைப் பற்றிய நூல்களை வாசிப்பது எனது முக்கிய பொழுதுபோக்காகும். அதனைப் போல நீங்களும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செய்தித்தாள்களை வாசிப்பதை உங்களுடைய தினந்தோறும் வேலையில் ஒன்றாக பாருங்கள்' என்றார்.

கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் பேசுகையில்,' 23ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு கோவையில் அமைதி நிலவுவதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் முக்கிய காரணம். அனைவரும் இணைந்து ஒரு டீமாக செயல்பட்டதே காரணம். சிவில் சர்வீஸ் தேர்வைப் பொறுத்தவரை டீம் ஸ்பிரிட் என்பது மிகவும் முக்கியம்.

பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்
பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

ஒரு குழுவாக சேர்ந்து இணைந்து தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும்.சிவில் சர்வீஸ் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே யூனிபார்ம் சர்வீஸ், ஐபி.எஸ் தான். பழைய பிரச்னைகளாக இருந்தாலும் சரி அதற்கு புதிய தீர்வுகளை கண்டறிய வேண்டும். அப்படி ஒரு திட்டம் தான் "போலீஸ் அக்கா" திட்டம். என்றார்.

இறுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஐ.ஏ.எஸ், ' பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவன், குந்தவை, ஆதித்த கரிகாலன் போன்ற கதாபாத்திரங்கள் எவ்வாறு அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ, அதேபோல யூபிஎஸ்சி தேர்வுக்கான உங்களின் தயாரிப்புகள் உங்களை வேறு ஒரு மனிதனாக மாற்றிவிடும். நான் முதலில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினேன்.

சமீரன் ஐ.ஏ.எஸ்
சமீரன் ஐ.ஏ.எஸ்

`வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தில் வருவது போல தான் தூத்துக்குடி மக்களின் பாஷை இருக்கும். தூத்துக்குடி தமிழை கற்றுக்கொள்வது சவாலாக இருந்தது. சிவில் சர்வீஸ் தேர்வில் எழுத நினைப்பவர்கள் எங்கும் சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.' என தனது பணி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் பலரும் உற்சாகத்துடன் நிகழ்ச்சியைக் கவனித்தனர். தங்கள் எதிர்காலக் கனவுக்கான விதை அவர்களுக்குள் ஆழமாக ஊன்றப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.