Published:Updated:

நம்பிக்கை விருது விழாவில் கலந்துக்கணுமா? - மிஸ்டு கால் கொடுங்க! #VikatanAwards

ஆனந்த விகடன் நம்பிக்கை விருது விழாவில் இந்த முறை பிரபலங்களோடு வாசகர்களாகிய நீங்களும் இணைந்து விழாவை சிறப்பிக்க இருக்கிறீர்கள்.

ஆனந்த விகடன் விருதுகள்
ஆனந்த விகடன் விருதுகள்

இது, ஆனந்த விகடனின் விருதுகளுக்கான நேரம். சினிமா விருதுகளைத் தொடர்ந்து, மகத்தான தமிழர்கள் மகுடம் சூடும் நம்பிக்கை விருதுகளுக்கான மேடை தயாராகிவிட்டது. ஒவ்வோர் ஆண்டும் இலக்கிய உலகின் மதிப்புமிக்க எழுத்தாளர்கள், சமூக முன்னேற்றத்துக்காக தம் பங்கினை தந்திருக்கும் டாப் 10 மனிதர்கள், நாளைய சமூகத்தின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் டாப் 10 இளைஞர்கள், ஊடக உலகில் உங்கள் மனம்கவர்ந்த நட்சத்திரங்கள்... என தமிழர்கள் கொண்டாடிய, கொண்டாடப்பட்ட வேண்டிய ஆளுமைகள் அணிவகுக்கும் அசத்தல் சங்கம மேடை இது.

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2019
 சூர்யா
சூர்யா

இந்த ஆண்டும் அப்படி வேறுவேறு துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகள்... உங்களின் மனமுவந்த பாராட்டுகளோடு, உங்களின் பலத்த கைதட்டல்களோடு கௌரவிக்கப்படவிருக்கிறார்கள்.

இலக்கிய பங்களிப்புகளுக்காக எழுத்தாளர் பொன்னீலன், அகரம் அறக்கட்டளை மூலம் கல்விக்காக தொடர்ந்து பங்களித்து வரும் சூர்யா, இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், அமெரிக்காவையே கலக்கிய பியானோ சிறுவன் லிடியன் நாதஸ்வரம், மக்களுக்காக போராடும் வழக்கறிஞர் செல்வகோமதி, இளம் கிரிக்கெட் வீரர் பெரியசாமி என ஏராளமானோர் பெருமைப்படுத்தப்பட உள்ளனர்.

044-66808070
இந்த விழாவில் நீங்களும் பங்கேற்க விருப்பம் இருந்தால்... உடனே... இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

தமிழர்களின் மரபை பறைசாற்ற கீழடி ஆய்வுக்காக போராடிய போராளிகள், மனிதர்களே மலம் அள்ளும் கொடுமைக்கு முடிவுகட்ட எந்திரம் படைத்த இளைஞர்கள், மாற்றுதிறனாளிகளுக்காக சிறப்பு நாற்காலியை உருவாக்கிய மாணவர்கள் என நம்மை தலைநிமிர செய்தவர்களும் இவர்களோடு விருதுகளைப் பெற உள்ளனர்.

கனிமொழி மதி
கனிமொழி மதி

இந்திய அளவிலான சமூக ஆளுமைகள், திரைத்துறையிலும் சமூகப் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் நட்சத்திரங்கள், தமிழ் இலக்கியத்துக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கும் செந்தமிழர்கள், அதிகாரம்மிக்க பதவிகளில் அமர்ந்து மக்களின் தேவைகளை மனமுவந்து பூர்த்தி செய்யும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்று சாதனையாளர்களைப் பாராட்ட உள்ளனர்.

ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் விழா என்பது, சாதித்தவர்களை தமிழகமே உச்சிமுகர்ந்து கொண்டாடும் அற்புதத் தருணம். உணர்ச்சிகரமான, நெகிழ்ச்சிகரமான, மகிழ்ச்சிகரமான இந்த நிகழ்வு ஒவ்வோராண்டும் அற்புத அனுபவத்தை உருவாக்கத் தவறுவதில்லை. இந்த ஆண்டு அந்த அனுபவத்தை நீங்களும் பெற உடனே... கீழேயுள்ள எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

044-66808070
இந்த விழாவில் நீங்களும் பங்கேற்க விருப்பம் இருந்தால்... உடனே... இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா நடக்கும் நாள்: 24.01.2020, வெள்ளிக்கிழமை.

இடம் - சென்னை

நேரம் - மாலை 5 மணி முதல் 

உங்கள் கவனத்துக்கு....

# முந்துபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.

# மாலை 5 மணிக்குள் அரங்குக்குள் இருக்கவேண்டும்.

# விழா நடக்கும் நேரம், இடம் பற்றி தங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

044-66808070
இந்த விழாவில் நீங்களும் பங்கேற்க விருப்பம் இருந்தால்... உடனே... இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.