Published:Updated:

`2 வருஷமா இல்லை; இப்போ வரப்போகுதாம்!' - டாஸ்மாக் கடைக்கு எதிராகக் கொதிக்கும் ஆண்டிபட்டி மக்கள்

கலெக்டர் அலுவலகம்
கலெக்டர் அலுவலகம்

ஆண்டிபட்டி பகுதி மக்கள், இன்று கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்துநிலையம் அருகே டாஸ்மாக் கடை திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடந்துவருவதாகக் கூறி, ஆண்டிபட்டி பகுதி மக்கள், இன்று கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

வழக்கறிஞர் பாண்டியன்
வழக்கறிஞர் பாண்டியன்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் பாண்டியன், ``ஆண்டிபட்டி நகர், சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களின் தலைமையிடம் என்றே சொல்லலாம். அதிலும் முதன்மையான இடம் பேருந்துநிலையம்தான். அதன் அருகே, வாரம்தோறும் திங்கள்கிழமை நடக்கும் சந்தைக்கு சுற்றியுள்ள கிராம மக்கள் வருவார்கள். கூடவே, பள்ளிக்கூடம், டியூஷன் சென்டர்கள், வணிக வளாகங்கள் எனப் பொதுமக்கள் எப்போதும் நடமாடக்கூடிய இடத்தில், டாஸ்மாக் கடை அமைக்க உள்ளதாம் மாவட்ட நிர்வாகம். கடந்த 2018-ம் ஆண்டு, ஆண்டிபட்டி பேரூராட்சிப் பூங்கா அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

குற்றச்செயல்களின் கூடாரமா தேனி..?! அச்சத்தில் ஓ.பி.எஸ். ஊர் மக்கள் #TamilnaduCrimeDiary

அதற்கு எதிராக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நான் பொதுநல வழக்கு தொடர்ந்தேன். டாஸ்மார்க் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு வருடத்திற்குப் பிறகு, இப்போது பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை திறக்கத் திட்டமிட்டு, வேலைகள் நடந்துவருகிறது. பேரூராட்சி எல்லைக்குள் டாஸ்மாக் கடை இருக்கக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். ஆண்டிபட்டி பொதுமக்கள், மாதர் சங்கம் இணைந்து கலெக்டரை சந்தித்து முறையிட வந்தோம். ஆனால், சாதாரண ஓர் மனுவாகத்தான் அதைப் பார்த்தார்கள். இரண்டு வருடமாக ஆண்டிபட்டி நகர் மக்கள் நிம்மதியாக இருக்கும் சூழலில், தற்போது அவர்களின் நிம்மதியைக் கெடுக்கும் வேலையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது'' என்றார் கொதிப்போடு.

Representational Image
Representational Image
5,000 பேர்… ரூ.100 கோடி… தேனி மக்களை ஏமாற்றிய போலி நிறுவனம்!

இதுதொடர்பாக கலால்துறை உதவி இயக்குநர் ராஜாவிடம் பேசினோம். ``புகார் மனு தொடர்பாக தற்போதுதான் தகவல் கிடைத்தது. டாஸ்மாக் மேஜேனரிடம் பேசியுள்ளேன். `ஆண்டிபட்டி பேருந்துநிலையம் அருகே டாஸ்மாக் கடை வேண்டாம்; வேறு இடம் பாருங்கள்' எனக் கூறியுள்ளேன்” என்றார்.

``2 வக்‌ஷமா இல்லை. இப்போ வரப்போகுதாம். வந்துச்சுனா, ரோட்ட மறிச்சு போராட்டம்தான்'' என்றனர் ஆண்டிபட்டி மக்கள் கோபத்தோடு.

பின் செல்ல