Published:Updated:

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

கீழக்கரை அருகே பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட அங்கன்வாடிக் குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்; மருத்துவமனையில் அனுமதி

கீழக்கரை அருகே பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட அங்கன்வாடிக் குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே பனையங்கால் கிராமத்தில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தில் நேற்று மதியம் வழக்கம்போல் உணவு சமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அப்போது உணவுப் பாத்திரத்தின் அடிப்பகுதியில் பல்லி இறந்துகிடந்திருக்கிறது. இதையடுத்து உணவு வழங்கிய அங்கன்வாடிச் சமையலர் பதறியடித்துக்கொண்டு குழந்தைகளின் உணவுத் தட்டுகளை கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு முன்பாக ஏழு குழந்தைகள் அந்த உணவைச் சாப்பிட்டிருக்கின்றனர். இரண்டு அங்கன்வாடிப் பணியாளர்களும் அதே உணவைச் சாப்பிட்டிருக்கின்றனர். உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

கீழக்கரை அரசு மருத்துவமனை
கீழக்கரை அரசு மருத்துவமனை

உடனடியாக ஏழு குழந்தைகள் உட்பட ஒன்பது பேரையும் கீழக்கரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து தங்கள் குழந்தைகளைப் பார்த்து கதறி அழுதனர்.

இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்வையிட்டு, அரசு மருத்துவர்களிடம் குழந்தைகளின் உடல்நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார். மேலும் என்ன நடந்தது, சாப்பாட்டில் பல்லி விழுந்தது எப்படி என்பது குறித்து அங்கன்வாடிப் பணியாளர்களிடம் கேட்டு, `குழந்தைகள் சாப்பாட்டு விஷயத்தில் இவ்வளவு அஜாக்கிரதையாகவா இருப்பீர்கள்... இனி இது போன்று நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.