Published:Updated:

`ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு… 7 நிறுவனங்கள் முன் வந்துள்ளன’ - அனில் அகர்வால் தகவல்

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னணியில் சீனா இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

`ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்கு… 7 நிறுவனங்கள் முன் வந்துள்ளன’ - அனில் அகர்வால் தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னணியில் சீனா இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Published:Updated:
ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு ஆலையைச் சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளான, மே 22-ல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்கள் பேரணியில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து (மே 26-ல்) ஆலை, சீல் வைத்து மூடப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஆலையைத் திறக்க நீதிமன்றங்கள் மூலம் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இதற்கிடையில், ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் எனவும், ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது எனவும் இரு தரப்பினர் ஒவ்வொரு வாரமும் மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இருப்பினும் ஆலைக்கு எதிர்ப்புகள் வலுத்துக்கொண்டே இருந்தன. இதனால், இனி தமிழ்நாட்டில் மீண்டும் ஆலையைத் திறக்க முடியாது என முடிவு செய்த நிர்வாகம், ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய முடிவு செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கான அறிவிப்பினை நாளிதழ்களில் கடந்த ஜூன் 20-ம் தேதி விளம்பரமாகவே வெளியிட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உள்ள தாமிர உருக்கு வளாகம், கந்தக அமிலத் தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட 10 பிரிவுகளை விற்பனை செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த ஆலையை வாங்கிடத் திறன் படைத்த தரப்பினர் வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவித்திருந்தது.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இந்த நிலையில், ”வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை விற்பனைக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் சூழ்ச்சிகள் உள்ளடங்கி இருக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஆலைக்கு எதிரான மக்களின் போரட்டத்தின் வேகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சிதான் இது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆலைத்தரப்பே ஆலை விற்பனை குறித்து உச்ச நீதிமன்றத்தில் எந்த முறையீடும் செய்யாமல் தன்னிச்சையாக அறிவித்துள்ளதே நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல்.

ஆலை விற்பனை செய்வது குறித்து அரசு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. மற்றொரு பினாமி கம்பெனியின் பெயரில் மீண்டும் ஆலையில் காப்பர் உற்பத்தியைத் தொடங்கும் முயற்சியாகக்கூட இருக்கலாம். ஸ்டெர்லைட் மட்டுமல்ல, எந்த ஒரு பெயரிலும் காப்பர் உற்பத்தி தொழிற்சாலையை மீண்டும் இந்த மண்ணில் இயங்க அனுமதிக்க மாட்டோம். தி.மு.கவின் தேர்தல் பரப்புரையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை முதல்வரும், இந்த தொகுதியின் எம்.பி கனிமொழியும் காப்பாற்ற வேண்டும்” என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போரடடக்குழுவினர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்குவதற்கு 7 நிறுவனங்கள் முன் வந்துள்ளது என, வேதாந்தாவின் தலைவர் அனில் அகர்வால் கூறியுள்ளார். அத்துடன், ஸ்டெர்லைட் ஆலையை மூடிட நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னணியில் சீனா இருந்துள்ளது. போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு சீனா, பண உதவி செய்துள்ளது என்ற பகிரங்க குற்றச்சாட்டினையும் முன் வைத்துள்ளார்.