Election bannerElection banner
Published:Updated:

`கொரோனா வைரஸை அழிக்கும் புதிய சானிடைசர்!’ - அண்ணா பல்கலைக்கழகம் கண்டுபிடிப்பு

Hand sanitizer
Hand sanitizer

சாதாரண சானிடைசர்களைவிட இதற்கு 8 அல்லது 10 ரூபாய் அதிகம் செலவாகும்.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியதும் சானிடைசர்களுக்கு பெரிய டிமாண்டு ஏற்பட்டது. மார்ச் மாதத் தொடக்கத்தில் மட்டும் அதன் விற்பனை இங்கே 10 மடங்கு அதிகரித்திருந்தது. சானிடைசர்களில் இருக்கும் ஆல்கஹால் வைரஸ்களின் மீது செயலாற்றும். வைரஸ்களின் வெளிப்புறக் கட்டமைப்பைத் தாக்கி அதன் பரவுதலைக் கட்டுப்படுத்தும்.

`புதிய வகை சானிடைசர் தயாரிப்பு' - இலவசமாக வழங்கும் ரூர்க்கி ஐ.ஐ.டி மாணவர்கள்!

அதிலும், ஆல்கஹால் அளவுமே குறைந்தபட்சம் 60 சதவிகிதம் இருந்தால் மட்டுமே பரவுதலைக் கட்டுப்படுத்த முடியும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் சுகாதாரப் பாதுகாப்புக்கான கருவிகள் உற்பத்திச் செய்யும் தேசிய மையம், புதிய வகை சானிடைசர்களைக் கண்டுபிடித்துள்ளது.

சாதாரண சானிடைசர்களைவிட, இதற்கு 8 அல்லது 10 ரூபாய் அதிகம் செலவாகும். இந்த வகைச் சானிடைசர்கள் நுண்கிருமிகளின் மையம் வரை ஊடுருவி அதை நொறுக்கும் ஆற்றல் உடையது. இந்த சானிடைசரைக் கண்டுபிடித்திருக்கும் கருவிகள் உற்பத்தித்துறை, ``இதை நாங்கள் ஈஸ்ட் நுண்கிருமிகளில் செயல்படுத்திப் பார்த்தோம். அதன் ஆர்.என்.ஏ வரை ஊடுருவி முற்றிலுமாக அழிக்கிறது. ஈஸ்ட் நுண்கிருமியின் நியூக்ளிக் அமில மையம் போலதான் கொரோனாவின் நியூக்ளிக் அமில மையமும் இருக்கும் என்பதால் அதில் கொரோனா வைரஸிலும் இது செயலாற்றும்” என்கின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தற்போது வரை 200 செவிலியர்கள், மருத்துவர்களுக்கு இந்த சானிடைசர்களின் மாதிரி வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்தத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்தப் புதுவகைச் சானிடைசர்கள் உற்பத்தி மற்றும் பரவலாக்கம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு