Published:Updated:

`நீட் ரிசல்ட் வரட்டும்... சூர்யா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்' - அண்ணாமலை ஆரூடம்

அண்ணாமலை
அண்ணாமலை

நீட் தேர்வு ரிசல்ட் வந்த பிறகு, நடிகர் சூர்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார் என்று பா.ஜ.க அண்ணாமலை கூறியிருக்கிறார்.

பா.ஜ.க சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கோவை சுங்கம் பகுதியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழ்நாட்டில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது. கூட்டணிக்குள் முரண்பாடுகள் வருவது சகஜமானதுதான். மும்மொழிக் கல்விக் கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க தெளிவாக இருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை
தஞ்சை: `மோடி பிறந்தநாளில் பேசும் அளவுக்கு நடிகர் சூர்யா பெரிய ஆள் இல்லை!’- ஜீவஜோதி

புதிய கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்க ஆரம்பித்துவிட்டன. `தமிழகத்தில் இரு மொழிக் கல்விக் கொள்கை தொடரும்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அவரது கருத்து. ஆனால், தமிழக மக்கள் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர்.

பெரியாரின் கொள்கைகளில் பலவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். அதேநேரத்தில் மக்களின் சமூகநீதிக்காகப் பாடுபட்ட பெரியாரின் சில கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறோம். பிறந்தநாளின்போது வாழ்த்து தெரிவிப்பது அரசியல் நாகரிகம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிப்பதால் அறிவுத்திறன் அதிகரிக்கும். இந்தி மொழி விவகாரத்தில் தி.மு.க இரட்டை நிலைப்பாடுகொண்டிருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

நீட் தேர்வு அச்சத்தால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது. நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நீட் விவகாரத்தை அரசியல் தலைவர்கள் அரசியலாக்குகிறார்கள்.

நடிகர் சூர்யா நல்ல மனிதர், நல்ல நடிகர். நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கை வரம்பைத் தாண்டும் வகையில் இருந்தது. சூர்யாவின் கேள்விகளுக்கான விடையை 2020 நீட் ரிசல்ட் சொல்லும். நீட் தேர்வு ரிசல்ட் வந்த பின்னர், நடிகர் சூர்யா நீட் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்.

அண்ணாமலை
அண்ணாமலை

மருத்துவக் கல்வியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. சமூக வலைதளங்களில் அநாகரிகமாக விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு