Published:Updated:

`மற்றொரு கீழடியா இலந்தைக்கரை?' - கண்டுகொள்ளுமா அரசு

அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

கீழடியில் இருந்து சுமார் 70 கி.மீ தூரத்திலும் காளையார்கோயிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் உள்ளது இலந்தைக்கரை.

கற்பாசிகள்
கற்பாசிகள் ( சாய்தர்மராஜ் )

கீழடியைப்போல் வேறு சில இடங்களிலும் பண்டைய தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துவருகின்றன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடியில் 2015-ம் ஆண்டு ஜூன் மாதத்தில், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு ஆய்வைத் தொடங்கியது.

இலந்தைக்குளம்
இலந்தைக்குளம்

ஆய்வு மாதிரிகளைக் கரிமவேதியியல் சோதனைக்கு உட்படுத்தியதில் அவை, கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததென உறுதிப்படுத்தப்பட்டன. அதன்பின் அடுத்தடுத்த ஆய்வுப் பணிகள் முடிவடைந்து தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் தொன்மையான மனிதர்கள் ஏராளமானோர் கூடி வாழ்ந்ததற்கான முக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதாகத் தொல்லியல்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கீழடியைப்போல் சிவகங்கையில் மற்றொரு இடத்திலும் பழைமையான பொருள்கள் கிடைத்துவருகின்றன.

இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ், "கீழடியிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்திலும் காளையார்கோயிலிருந்து 20 கி.மீ தூரத்திலும் உள்ளது இலந்தைக்கரை.

நாணயங்கள்
நாணயங்கள்

எங்கள் ஊரிலும் கீழடியில் கிடைத்த பொருள்கள் போன்று பல்வேறு வகையான பொருள்கள் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இந்தப் பொருள்களை சேகரித்துவருகிறேன். இலந்தைக்கரை வேலாந்திடல் என்ற இடத்தில் ஜே.சி.பி வைத்து தோண்டும்போது சுடு மண், பொம்பைகள், வித விதமான கண்ணாடி, பாசி, நாணயங்களும் கிடைத்துள்ளன.

கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள்  #spotvisit

பல்வேறு பொருள்கள் இங்கே உற்பத்தி செய்ததற்கான சான்றுகள் உள்ளன. அம்மி, குழவி, அடுப்பு உள்ளிட்ட பொருள்களின் மூலம் பல்வேறு வகையான பொருள்கள் இங்கே உற்பத்தி செய்திருக்கலாம் எனத் தெரியவருகிறது. மேலும், இப்பகுதியில் நதி ஒன்று இருந்ததற்கான தடையங்களும் உள்ளன. காலப்போக்கில் அது மாறி இருக்கலாம். இப்படி ஏராளமான அதிசயங்கள் எங்கள் பகுதியிலும் உள்ளன.

இலந்தைக்குளம்
இலந்தைக்குளம்

இவற்றை, தொடர்ந்து தொல்லியல் ஆர்வலர்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். கீழடியைப்போல இங்கேயும் அகழாய்வு செய்தால் கண்டிப்பாகப் பல்வேறு விதமான பண்டைய தமிழிர்களின் அடையாளத்தை மீட்டெடுக்கலாம். அரசு இதில் ஆர்வம் காட்ட வேண்டும்" என்றார்.

கீழடி என் தாய்மடி! - சிகாகோ  மாநாட்டில் ஓங்கி ஒலித்த தமிழ்க் குரல்கள் #MyVikatan