Published:Updated:

மதுபோதையில் ரகளை செய்த வாலிபர்கள்; விலக்கப்போன பெண் காவலருக்கு நிகழ்ந்த துயரம்!

அறந்தாங்கி காவல் நிலைய
அறந்தாங்கி காவல் நிலைய

மதுபோதையில் அபுதாஹீர், செய்யது முகமது இருவரும் சண்டையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருவரையும் விலக்கிவிட்ட பெண் காவலர் அவர்களிடம் பேச முயன்றுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அறந்தாங்கி செக்போஸ்ட்டில் வாகனத் தணிக்கைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது செக்போஸ்ட் அருகே அக்னிபஜார் பகுதி சாலையில் இருவர் சண்டைபோட்டுக்கொண்டிருப்பதாக அந்தப் பெண் காவலருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து அறந்தாங்கி எஸ்.ஐ-க்கு தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்துக்குச் சென்றிருக்கிறார்.

அறந்தாங்கி காவல் நிலையம்
அறந்தாங்கி காவல் நிலையம்

புதுக்கோட்டை : "என் மனைவி இறந்து இன்னையோட 19 நாள் ஆகுது !"- எஸ்.ஐயின் உருக்கமான விழிப்புணர்வு.

அப்போது அபுதாஹீர் மற்றும் சய்யது முகமது இருவரும் நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டிருந்துள்ளனர். இருவரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர்களை விலக்கி விட்ட அந்தப் பெண் காவலர் அவர்களிடம் பேச முயன்றுள்ளார். அப்போது அபுதாஹீர் பெண் காவலரை பலமாக அவரது கன்னத்தில் அறைந்துவிட்டார்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத பெண் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். சம்பவ இடத்துக்கு வந்த மற்ற போலீஸார் பெண் காவலருக்கு மயக்கத்தைத் தெளிய வைத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அபுதாஹீர்
அபுதாஹீர்
கரூர்: `போதையில் இருக்குறே, தகராறு செய்யாதே!' - அறிவுரை சொன்ன தாய்க்கு மகனால் நேர்ந்த துயரம்

இதையடுத்து அந்தப் பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அபுதாஹீர் மீது வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி போலீஸார், அவரை கைது செய்தனர்.

காவலரை, குடிபோதையில் ஒருவர் அறைந்த சம்பவம் அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்ட் சம்மன் கொடுக்கப்போன அறந்தாங்கி காவலரை மூன்று - நான்கு பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில்தான் அதேபோல் மீண்டும் பெண் காவலர் ஒருவர் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் நடந்திருப்பது, காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு