Published:Updated:

தமிழ்நாடு அரசின் டெண்டர் தகவல்கள்... A-Z மக்கள் அறிந்துகொள்ள அறப்போர் இயக்கத்தின் புது முயற்சி!

அறப்போர் இயக்கம் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் டெண்டர் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக அறப்போர் இயக்கம் செயலி மற்றும் வலைதளம் தொடங்கியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் டெண்டர் தகவல்கள்... A-Z மக்கள் அறிந்துகொள்ள அறப்போர் இயக்கத்தின் புது முயற்சி!

தமிழ்நாடு அரசின் டெண்டர் தொடர்பான தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக அறப்போர் இயக்கம் செயலி மற்றும் வலைதளம் தொடங்கியிருக்கிறது.

Published:Updated:
அறப்போர் இயக்கம் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசின் ஒப்பந்தப் பணிகள் குறித்த டெண்டர் ஆவணங்களைக் குடிமக்கள் தெரிந்துகொள்ள அறப்போர் இயக்கம் "அறப்போர் டெண்டர் App" மற்றும் "https://tntenders.arappor.org/" என்ற வலைதளப் பக்கத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு அரசின் ஒப்பந்தப் பணிகள் மூலம் குடிமக்களுக்காகச் சாலை போடுவது, மழைநீர் வடிகால் அமைப்பது, நீர்நிலைகள் சீரமைப்பு, கேபில்கள் அமைப்பது, சுகாதார மற்றும் கல்வி நிலையங்கள் அமைப்பது போன்ற பல அரசு பொதுப்பணிகள் தினம்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

எனினும் இப்பணிகள் எல்லாம் டெண்டரில் குறிப்பிட்டுள்ள விதிகள் மற்றும் விவரங்கள்படி செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மக்களுக்கு அந்த டெண்டர்களின் விவரக்குறிப்புகள் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கான வழி தற்போது இல்லை. அதனால் குடிமக்கள் அரசின் நிர்வாக முறைகேடு, ஊழலைத் தடுக்க தகவல் மற்றும் வெளிப்படைத்தன்மை முக்கிய அம்சங்களாகும். இதற்கான வழியை ஏற்படுத்த, தன்னார்வலர்கள் முயற்சியோடு தமிழ்நாடு அரசு www.tntenders.gov.in வலைதளத்தில் வெளியிடும் அனைத்து ஒப்பந்த ஆவணங்களையும் டெண்டர் விண்ணப்ப நாள் முடிவதற்கு முன் சேகரித்து வைக்க அறப்போர் இயக்கம் வழி செய்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறப்போர் இயக்கம் செயலி
அறப்போர் இயக்கம் செயலி

அறப்போர் தன்னார்வலர்கள் இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் www.tntenders.gov.in என்ற வலைதளத்தில் அரசின் 60-க்கும் மேற்பட்ட துறைகளால் விடப்பட்ட 36,000 டெண்டர் ஆவணங்களைச் சேகரித்துள்ளனர். https://tntenders.arappor.org/ என்ற தளத்தின் மூலமும், அறப்போர் செயலி மூலமும் உங்கள் இடங்களில் நடக்கும் பொதுப்பணிகளின் டெண்டர் ஆவண விவரங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். அரசாங்கப் பணிகளை கேள்வி கேட்கவும், அதன் தரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என நம்புகிறோம். இந்தச் செயலியைக் கூகுள் ப்ளேஸ்டோரில் (Google Playstore) `ARAPPOR' என்று தேடி பதிவிறக்கச்செய்து கொள்ளலாம். மேலும் டெண்டர் விவரங்களை https://tntenders.arappor.org/ என்ற வலைப்பக்கத்திலும் காணலாம். அரசும் இது போன்ற முறையை ஏற்றுக்கொண்டு இணையத்திலும் டெண்டர் வழங்கும் இடத்திலும் டெண்டர் ஆவணம் மற்றும் வேலை குறிப்புகளை மக்களுக்குக் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism