Published:Updated:

`சந்தை விலை ரூ.105; வேலுமணி டிரஸ்ட்டுக்கு வெறும் 5 ரூபாய்' கோவை மாநகராட்சியில் அறப்போர் இயக்கம் மனு!

கோவை மாநகராட்சி டெண்டர் வழிமுறைகளில் மாற்றங்கள் மற்றும் நடவடிக்கை வேண்டி அறப்போர் இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த மாதம் ரெய்டு நடத்தினர். அறப்போர் இயக்கமும், தி.மு.க-வினரும் ஆதாரத்துடன் வழங்கிய டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்தப்பட்டது.

ரெய்டு
ரெய்டு
வேலுமணி விவகாரம்: தொடரும் `ரெய்டுகள்’... விசாரணை வளையத்தில் அதிகாரிகள்!

சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சுமார் 800 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாகத் தகவல் வெளியானது. கோவை மாநகராட்சி டெண்டர் வழிமுறைகளில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் குறித்து, அறப்போர் இயக்கம் சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அறப்போர் இயங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ``கோவை மாநகராட்சியை நேர்மையான மாநகராட்சியாக மாற்ற எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆணையரைச் சந்தித்து சில கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். கோவை மாநகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாக செட்டிங், மோசடி மற்றும் ஊழல் டெண்டர்களில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான செந்தில் அண்ட் கோ,

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

கே.சி.பி இன்ஜினீயர்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். இந்த ஊழல் டெண்டர்களுக்குக் காரணமான அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை பாய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே டெண்டரில் போட்டிபோடும் இரண்டு நிறுவனத்தின் இயக்குந்ர் ஒரே நபராக இருந்தாலோ அல்லது நேரடி சொந்தக்காரர்களாக இருந்தாலோ அவர்கள் டெண்டரில் போட்டி போட தடை விதிக்கும் நிபந்தனைகள் ஒவ்வொரு டெண்டர் ஆவணத்திலும் இடம்பெற வேண்டும்.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

கோவை மாகராட்சி டெண்டர்களை முழுக்க முழுக்க இ – டெண்டர்களாக மாற்ற வேண்டும். எந்தக் காரணத்துக்கும் டெண்டர் முடியும் வரை ஒப்பந்ததாரர் அதிகாரிகளை நேரடியாகச் சந்திக்கவேண்டிய அவசியம் இருக்கக் கூடாது.

டெண்டரில் போட்டி போட்டவர்கள் யார், எவ்வளவு விலைக்கு எந்த டெண்டரை எடுத்திருக்கிறார்கள், டெண்டர்களில் செய்ய வேண்டிய வேலைகள் எவை போன்ற விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். சாலை அமைக்கும் பணியின்போது, சாலை உயராமல் அதற்கேற்ப சாலையைத் தோண்டியெடுத்து, அதே உயரத்துக்கு சாலை அமைக்கும் முறையைக் கையாள வேண்டும்.

டெண்டர் பிட்
டெண்டர் பிட்

டெண்டர் வேலைகளின் தரத்தைச் சரிபார்க்க நேர்மையான அதிகாரிகளைக்கொண்டு, தன்னிச்சையான தரக் குழு அமைக்க வேண்டும். மாநகராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை தாமதமில்லாமல் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

சந்தை மதிப்பு மாதத்துக்கு, சதுர அடிக்கு ரூ.105 உள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் வெறும் ரூ.5-க்கு ஆலயம் டிரஸ்ட் மற்றும் வேலுமணியின் நல்லறம் டிரஸ்டுக்கு அம்மா ஐஏஎஸ் அகாடமி நடத்தக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அம்மா ஐஏஎஸ் அகடாமி இயங்கிக்கொண்டிருக்கும், கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான 5,400 சதுரடி நிலம் மற்றும் கட்டடம் திரும்பப் பெற்று கோவை சுகாதார ஆய்வாளர் அலுவலகத்துக்குத் தரப்பட வேண்டும்.

அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி
அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமி

கோவை மாநகராட்சி இணையதள புகார் வழிமுறையை `நம்ம சென்னை’ புகார் வழிமுறைபோல மேம்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு