Published:Updated:

கரூர்: `அமானுஷ்யக் கட்டடம்; அம்மோனியம் நைட்ரேட் பதுக்கல்?!' - அதிகாரிகள் அதிரடி ஆய்வு

குடோன்
குடோன் ( நா.ராஜமுருகன் )

உள்ளூர் மக்கள், `இந்தக் கட்டடத்தில் அம்மோனியம் நைட்ரேட் டன் டன்னாக இருக்கு. இதனால், எங்கள் உயிருக்கு ஆபத்து' என்று அச்சத்தை வெளிப்படுத்தினர்.

கரூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் அமானுஷ்யக் கட்டடத்தில், அபாயம்மிக்க அம்மோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்ய வந்த வருவாய்த்துறை அதிகாரிகளால், அந்தப் பகுதி மக்களிடம் பீதி ஏற்பட்டிருக்கிறது.

 குடோன்
குடோன்
நா.ராஜமுருகன்
கரூர்: இரவு முழுக்க சார்ஜ்; வெடித்துச் சிதறிய செல்போன்! - அதிகாலை பயங்கரம்

அண்மையில், லெபனான் நாட்டில் நீண்டகாலமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து, 100 பேர் வரை பலியாகினர். இதனால் உலகமே, 'அம்மோனியம் நைட்ரேட்' என்ற வார்த்தையைக் கேட்டால் அலறியது. இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், 'அம்மோனியம் நைட்ரேட்' என்ற வார்த்தை அச்சத்தை ஏற்படுத்தியது.

குடோன்
குடோன்
நா.ராஜமுருகன்

'சென்னையில் வைக்கப்பட்டிருந்த 740 டன் அம்மோனியம் நைட்ரேட், கரூர் ராயனூரைச் சேர்ந்த குமரேசன் என்பவருடையது’ என்றும், `கடந்த 2015-ம் ஆண்டு கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை, உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்துவைத்தோம்' என்றும் சுங்கவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், கரூரிலிருந்த குமரேசனை சென்னைக்கு அழைத்த அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், குமரேசன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் அம்மோனியம் நைட்ரேட்டைப் பாதுகாத்துவைக்கக் கட்டிய கட்டடம், இப்போது அமானுஷ்யமாகத் தோற்றம் காட்டி உள்ளூர் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள பண்ணப்பட்டி அருகே இருக்கும் அஞ்சாகவுண்டனூரில் இருக்கிறது அந்தக் கட்டடம். 50 ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் உள்ளது. 'கரூரைச் சேர்ந்த குமரேசன் இறக்குமதி செய்த அம்மோனியம் நைட்ரேட்' என்று மீடியாவில் தகவல் பரவியதால், இந்த அமானுஷ்யக் கட்டடத்தைச் சுற்றி பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

குடோன்
குடோன்
நா.ராஜமுருகன்

உள்ளூர் மக்கள், "இந்தக் கட்டடத்தில் அம்மோனியம் நைட்ரேட் டன் டன்னாக இருக்கு. இதனால் எங்கள் உயிருக்கு ஆபத்து’’ என்று அச்சத்தை வெளிப்படுத்தினர். இதனால் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் அந்த அமானுஷ்ய வெடிமருந்து குடோனில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கரூர் வருவாய் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணி தலைமையில், அரவக்குறிச்சி வட்டாச்சியர் வேலுச்சாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் அந்த வெடிமருந்து குடோன் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில், அரவக்குறிச்சி வருவாய் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணி பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``தற்போதய நிலையில் குடோனில் இருப்பு இருப்பதுபோல் தெரியவில்லை. நாங்கள் ஆய்வு செய்துவிட்டோம். இங்கிருந்து அம்மோனியம் நைட்ரேட்டை வெளியில் எடுத்துச் செல்வது போன்ற நிகழ்வுகளும் நடந்ததாகத் தெரியவில்லை.

குடோன்
குடோன்
நா.ராஜமுருகன்

இங்கு வாகனம் வந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளரை வரவழைத்து, பூட்டியிருக்கும் அறைகளைத் திறந்து பார்த்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். அதுவரை மக்கள் அமைதி காக்கவும். தவிர, மக்கள் அச்சப்படும் அளவுக்கு இந்தக் கட்டடத்தில் ஒன்றுமில்லை" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு