Published:Updated:

வைகையைத் தொடர்ந்து தாமிரபரணி நதிக்கரையிலும் அகழ்வாராய்ச்சி - களமிறங்கும் தொல்லியல் துறை!

நீருக்கடியில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள, தமிழகத் தொல்லியல் துறை முடிவெடுத்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நடப்பாண்டில், தமிழகத் தொல்லியல்துறை சார்பில் நடத்தப்படும் ஆராய்ச்சிகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஆதிச்சநல்லூர் முதல் கீழடிவரை தொடர்ந்து தமிழர்கள் குறித்த ஆராய்ச்சிகள் மறைக்கப்படுவதாகக் கூறப்பட்டுவந்தது. இந்த நிலையில், கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் இந்தியத் தொல்பொருள் கழகம் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது.

அமர்நாத்
அமர்நாத்

கீழடி நாகரிகம், மற்ற நாகரிகங்களைவிடவும் தொன்மையானது என ஆய்வுகள் வெளியாயின. அதையடுத்து, கீழடியில் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டன. அதையடுத்து, ஆராய்ச்சியை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது நீதிமன்ற உத்தரவுடன் கீழடி ஆராய்ச்சியைத் தமிழகத் தொல்லியல் துறையே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத் தொல்லியல் துறையே தற்போது பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறது. அதற்கான அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும். அதோடு, கீழடியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இனி ஆராய்ச்சி நடக்கும்.

கீழடி
கீழடி

அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தொல்லியல் ஆய்வுகள் இனி அதிகரிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை வைகை நதி நாகரிகம் கீழடியில் வெளியானதுபோல், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆராய்ச்சி மேற்கொண்டால் பல தகவல்கள் கிடைக்கும் எனத் தாமிரபரணி நதிக்கரை நாகரிகம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆதித்தமிழர்களின் வணிகப் பாதையை மையமாக வைத்து, நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி
தாமிரபரணி

அதையடுத்து, கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் அரேபியர்களுடனான வணிகப்பாதையில் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படவிருக்கிறது. இதற்காகத் தேசியக் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் எனத் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு