Published:Updated:

சிவகங்கை: `20% உற்பத்தி; வாங்க ஆள் இல்லை!’ - முடங்கிப்போன அரியக்குடி விளக்குத் தொழில்

விளக்கு செய்யும் பட்டரை
விளக்கு செய்யும் பட்டரை

இப்ப எல்லாரும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது விளக்கு எப்படி வாங்குவாங்க. எல்லார் நிலைமையும் சரியாகணும். அப்பதான் மீள முடியும்.

`செட்டிநாடு பலாகரம் முதல், செட்டிநாடு சொலவடை வரை அனைத்தும் தனித்துவமான ஒன்று. ஆத்தங்குடி டைல்ஸ், காரைக்குடி கண்டாங்கி சேலை வரிசையில் அரியக்குடி விளக்கும் அரிதான பொக்கிஷம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது அரியக்குடி கிராமம். ஆன்மீகம் கமழும் இந்தன் கிராமத்தில் பூஜை பொருட்களின் ஒன்றான விளக்கை இப்பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் ஏராளமானோர் செய்து அசத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் விஷேச நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாததால் விளக்கு செய்யும் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

அரியக்குடி விளக்கு
அரியக்குடி விளக்கு

இது குறித்து அரியக்குடியில் பாரம்பரியமாக விளக்கு தயார் செய்யத்துவரும் மாரிக்கண்ணு அசோக்குமார், ``அரியக்குடி பித்தளை விளக்கு மற்ற இடங்களை விட வித்தியாசமா இருக்கும். டிசைனும் எடையும் மாறுபட்டது இருக்கும். ஆரம்பத்துல நகரத்தார் மக்கள்தான் அதிகமா வாங்குவாங்க. இப்ப அரியக்குடி விளக்கை எல்லா தரப்பினரும் வாங்கிட்டு போறாங்க. டூரிஸ்ட் வர்ரவங்க காரைக்குடி பகுதி வரும் போது அரியக்குடி விளக்க விரும்பி வாங்குவாங்க. விளக்கின் உச்சியில் கும்ப வடிவிலும், சுற்றி உள்ள முகத்தில் நட்சத்திர வடிவத்திலையும் இருக்கும்.

மற்ற இடங்களில் கிடைக்கும் விளக்கு, குமிழ் அமைப்பு போல இருக்கும். செட்டிநாடு அரியக்குடி விளக்கு கை பிடிப்பதற்குத் தோதா குச்சிபோல இருக்கும். விளக்கு மையத்தில் காற்றுகள் இல்லாத அளவிற்குப் பித்தளை நிரம்பி இருக்கும். அதனால் விளக்கு நல்ல கனமாக இருக்கும். திருமணம், புதுமனை புகுவிழா, பரிசுப்பொருள், சீர்வரிசை, கோயில்களுக்கு உபயம் செய்ய, விளக்கு பூஜை உள்ளிட்ட எல்லா தேவைகளுக்கும் விளக்கு வாங்கிட்டு போவாங்க.

அரியக்குடி - விளக்கு - மாரி
அரியக்குடி - விளக்கு - மாரி

5 இஞ்ச் முதல் 5 அடி வரை விளக்குகள் ஆர்டரின் பெயரில் செய்துகொடுப்போம். சில்லறையாவும் தேவைப்படுவோருக்கு விற்பனை பண்ணுவோம். இப்ப கொரோனா காரணமாக விளக்கு விற்பனையே இல்லா போயிருச்சு. இப்பதைக்கு 20% உற்பத்தி செய்ய முடியுது. விளக்கு செய்ய மெட்டீரியகும் கிடைக்கல. செஞ்சாலும் வாங்க ஆள் இல்ல.

கொரோனா முடிஞ்சா தான் மீண்டு வரமுடியும். வேலை ஆட்களுக்கு வேலை கொடுக்கனும்னு மாசத்தில் 15 நாள் கம்பெனிய தொறந்து விளக்கு செய்றோம். கல்யாணம், திருவிழா, விளக்கு பூஜை உள்ளிட்ட விசேசங்க இயல்பா நடந்தாதா விளக்கு விற்பனை ஆகும்.

 சின்ன விளக்கு
சின்ன விளக்கு

இப்ப எல்லாரும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது விளக்கு எப்படி வாங்குவாங்க. எல்லார் நிலைமையும் சரியாகணும். அப்பதான் மீள முடியும். இந்த கஷ்ட காலத்தில அரசு அதிகம் கடன் உதவிகள் வழங்கணும். அப்பதான் நஷ்டத்த ஈடு செய்யலாம். கொரோனா முடிஞ்சாதான் எதோ எல்லோரும் முன்னேற முடியும் இல்லேனா எல்லார் நிலைமையும் கஷ்டம்தான்” என்று வேதனை தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு