Published:Updated:

குளச்சல்: `மாட்டுவண்டி பீரங்கி; போர்க் கைதி டு தளபதி’ - விக்டரி பில்லரின் சுவாரஸ்ய வரலாறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குளச்சல் வெற்றித்தூணுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம்
குளச்சல் வெற்றித்தூணுக்கு ராணுவ வீரர்கள் வீரவணக்கம்

பாங்கோடு மெட்ராஸ் ரெஜிமெண்ட் 9-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீஸர் தாஸ் தலைமையில் 10 ராணுவ வீரர்கள் குளச்சல் வந்து வெற்றித்தூணுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் சுதந்திரத்துக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் வாள், ஈட்டி போன்ற ஆயுதங்கள்தான் போருக்கு பயன்படுத்தப்பட்டன. அந்தச் சமயத்தில் துப்பாக்கியுடன் வந்த பிரிட்டீஸ் படையை வெற்றிக்கொண்ட வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது. அந்த வெற்றியைக் குறிக்கும் விதமாக குளச்சலில் வெற்றித்தூண் நிறுவப்பட்டு இன்றுடன் 279 ஆண்டுகள் ஆகின்றன.

1741-ம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி மாவட்டம் இருந்தது. அந்தச் சமயத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கப்பலில் குளச்சல் துறைமுகத்துக்கு டச்சுப்படை வந்தது. திருவிதாங்கூர் படையிடம் துப்பாக்கி, பீரங்கி போன்ற இயந்திர ஆயுதங்கள் இல்லை. எனவே, மாட்டு வண்டிகளில் பனை மரத்தின் தடிகளை வைத்து பீரங்கிபோன்று வடிவமைத்து குளச்சல் கடற்கரையில் நிறுத்தினர். கப்பலில் இருந்து பார்ப்பதற்கு கரையில் வைக்கப்பட்டிருந்த பனை மரங்கள் பீரங்கிபோன்று காட்சியளித்தன. இதனால் டச்சுபடைக்கு பீதி கிளம்பியது. இதையடுத்து படகுகளில் சென்று கப்பலில் ஓட்டை ஏற்படுத்தியது போன்ற சில தந்திரங்கள் மூலம் டச்சுப்படையை வீழ்த்தியது திருவிதாங்கூர் படை.

கொரோனாவால் எளிமையாக நடந்த குளச்சல் வெற்றித்தூண் வீரவணக்கம்
கொரோனாவால் எளிமையாக நடந்த குளச்சல் வெற்றித்தூண் வீரவணக்கம்

டச்சுப்படை தோற்றதைத் தொடர்ந்து அந்தப் படை தளபதி டிலனாய் கைது செய்யப்பட்டர். டிலனாய் பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராணுவ தளபதியாகப் பிற்காலத்தில் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் பல போர்க்களங்களை கண்டது. டிலனாயின் மறைவுக்குப் பிறகு அவரது உடல் தக்கலை அருகே உள்ள புலியூர்குறிச்சி கோட்டைக்குள் அடக்கம் செய்யப்பட்டது. புலியூர் குறிச்சி கோட்டைக்குள் டிலனாய் நினைவிடம் அமைந்துள்ளது.

டச்சுப்படையைத் திருவிதாங்கூர் ராணுவம் வெற்றி பெற்றதன் நினைவாகக் குளச்சல் கடற்கரையில் "விக்டரி பில்லர்" என்ற வெற்றித்தூண் 1741-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி மார்த்தாண்டவர்மா மகாராஜாவால் நிறுவப்பட்டது. 279 ஆண்டுகளாக மழையிலும் வெயிலிலும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது இந்த வெற்றித்தூண். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியிலும் இந்த வெற்றித்தூணுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்
அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்

ஆரம்பகாலத்தில் கேட்பாரற்று நின்ற இந்த வெற்றித்தூணுக்கு 2009-ம் ஆண்டு அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் உத்திராடம் திருநாள் மகாராஜ மற்றும் திருவனந்தபுரம் பாங்கோடு மிலிட்டரி கேம்பை சேர்ந்த 16-வது மெட்ராஸ் ரெஜிமெண்ட் சார்பில் வெற்றித்தூணுக்கு 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பிறகு ஆண்டுதோறும் வெற்றித்தூணுக்கு ராணுவ மரியாதை கிடைத்து வந்தது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு ராணுவ மரியாதை செலுத்தப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வள்ளுவர் சிலை, வட்டக்கோட்டை, குளச்சல் தூண்... குமரியின் அடையாளங்கள் படங்களில்! 
#KanyakumariDay

ஆனாலும், பாங்கோடு மெட்ராஸ் ரெஜிமென்ட் 9-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீஸர் தாஸ் தலைமையில் 10 ராணுவ வீரர்கள் குளச்சல் வந்து, வெற்றித்தூணுக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். எளிமையான முறையில் நடந்த இந்த விழாவில் குளச்சல் எம்.எல்.ஏ பிரின்ஸ் மற்றும் குளச்சல் நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் வீரவணக்கம் செலுத்தினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு