Published:Updated:

பலத்த காற்று - சென்னைக்கு வரும் விமானங்கள் தற்காலிக நிறுத்தம்!

காற்று வேகமாக வீசுவதால், சென்னைக்கு வந்துசேர வேண்டிய விமானங்கள் வருகை நிறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமா வலுப்பெற்று இன்று மாலை கரையைக் கடக்கவிருப்பதால், பலத்த காற்று வீசிவருகிறது. இதனால், சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

பலத்த காற்று வீசிவருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்களின் வருகை இன்று மாலை 6 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.15 முதல் மாலை 6 மணி வரை விமானங்களின் வருகையை நிறுத்திவைத்துள்ளதாகவும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களின் இயக்கத்தில் எந்த தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு