Published:Updated:

25 செ.மீ உயரம், 12.5 செ.மீ அகலம்! - அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்கக்காப்பு, பழங்கால மண்பானை

பழங்கால மண்பானை

சோழனின் தலைநகராக விளங்கிய ’கங்கை கொண்ட சோழபுர’த்தின் அருகில் அமைந்துள்ள ஊர்தான் ’மாளிகை மேடு.’ இந்தியாவையும் தாண்டி, பல நாடுகளைத் தன்னுடைய நாட்டுடன் இணைத்துக்கொண்டவர்.

25 செ.மீ உயரம், 12.5 செ.மீ அகலம்! - அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்கக்காப்பு, பழங்கால மண்பானை

சோழனின் தலைநகராக விளங்கிய ’கங்கை கொண்ட சோழபுர’த்தின் அருகில் அமைந்துள்ள ஊர்தான் ’மாளிகை மேடு.’ இந்தியாவையும் தாண்டி, பல நாடுகளைத் தன்னுடைய நாட்டுடன் இணைத்துக்கொண்டவர்.

Published:Updated:
பழங்கால மண்பானை

கங்கைகொண்ட சோழபுரம் மாளிகை மேட்டில் 25 செ.மீ உயரம் கொண்ட பழங்கால மண்பானை, தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சியில் ஈடுபடும் இடங்களில் எல்லாம் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றிய தேடல்கள் தொடர்கின்றன. ஆனால் கங்கைகொண்ட சோழபுரத்தில் மட்டும்தான் மன்னரைப் பற்றியும் அவரின் மாளிகையைப் பற்றியுமான தேடல்கள் தொடர்ந்துவருகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்
கங்கை கொண்ட சோழபுரம்

வரலாற்றைப் புரட்டிப் போடும் அளவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் தென்மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரையைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள ’மாளிகைமேட்டி’லும் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் மற்ற இடங்களிலெல்லாம் அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றிய தேடல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இங்கு மட்டும்தான் மன்னரைப் பற்றியும் அவரின் மாளிகையைப் பற்றியுமான தேடல் தொடர்ந்துவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சோழப் பேரரசன் மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய ’கங்கை கொண்ட சோழபுர’த்தின் அருகில் அமைந்துள்ள ஊர்தான் ’மாளிகை மேடு.’ இந்தியாவையும் தாண்டி, பல நாடுகளைத் தன்னுடைய நாட்டுடன் இணைத்து வைத்தது மட்டும் அல்லாமல், பல நாடுகளுடன் வணிகத் தொடர்பும் மேற்கொண்டிருந்தவர்.

மாளிகை மேடு
மாளிகை மேடு

அதனாலேயே இந்த மாளிகை மேட்டின் வரலாற்றை ஆராய்ச்சி மேற்கொண்டு வெளிக் கொண்டுவருவதில் அனைவருக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில், கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு தொல்லியல் தளத்தில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியினை கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடந்து வரும் நிலையில் பல்வேறு பழங்காலப் பொருள்கள் கிடைத்துவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது 25 செ.மீ உயரமும், 12.5 செ.மீ அகலமும் கொண்ட பழங்காலத்து மண்பானை ஒன்றும், செம்மண்ணாலான கொண்டி மூக்கு மற்றும் 30 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டெடுக்கப்பட்டன. 25 செ.மீ உயரம் மற்றும் 12.5 செ.மீ அகலம் கொண்ட இந்தப் பானையானது ஒரு பகுதி சிறிது உடைந்த நிலையில் காணப்பட்டது.

மாளிகை மேடு ஆய்வு
மாளிகை மேடு ஆய்வு

கல்வெட்டு ஆதாரங்களின் உதவியுடன், மாளிகைமேட்டில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில், செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்கரிக்கப்பட்ட கூரை ஓடுகள் வடிவில் அரச அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் கண்டறியப்பட்டன. கடந்த 5-ம் தேதி தங்கக்காப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, முழுமையான மண்பானை கண்டெடுக்கப்பட்டது. இதுவரை தளத்தில் கிடைத்த பழங்காலப் பொருள்களில் செப்பு நாணயங்கள் மற்றும் செம்புப் பொருள்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் மற்றும் சீனப் பொருள்களைக் கண்டெடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism